சிறுவர்மணி

படிக்காத பஞ்சன்

நெஞ்சில் ஏதோ குழப்பத்தில் நாளை படிக்க எண்ணினான்

மனத்துக்கினியான்

 பஞ்சன் என்னும் சிறுவனோ
 பாடம் படிக்க எண்ணினான்
 நெஞ்சில் ஏதோ குழப்பத்தில்
 நாளை படிக்க எண்ணினான்
 
 அடுத்த நாளில் படித்திட
 எடுத்தான் புத்தகம் கையிலே
 பிடித்த நண்பன் ஒருவனோ
 பிடித்தான் போனில் அவனையே!
 
 ""மட்டைப் பந்து ஆட்டமே
 மாதா கோவில் தெருவிலே
 நெட்டை மணியும் ஆடுறார்
 நீயும் வாடா போகலாம்''
 
 -என்றே அழைக்கப் பஞ்சனும்
 எழுந்தே பறந்தான் பார்த்திட
 அன்றும் படிப்பு நின்றது
 அதுபோல் பலநாள் சென்றது
 
 தேர்வு நாளும் வந்தது
 கேள்வித் தாளைத் தந்தனர்
 ஆர்வம் பொங்கப் பார்த்தனன்
 அவனின் உள்ளம் நொந்தது
 
 பாடம் படிக்கா பஞ்சனோ
 பரீட்சை எழுதத் தவித்தனன்
 வாடிப் போன மனத்துடன்
 வந்தான் தோல்வி முகத்துடன்!

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவிரியில் தொடரும் ஆபத்து பயணம் காத்திருப்பில் ஒட்டனூா்- கோட்டையூா் பால அறிவிப்பு!

பேருந்தை மறித்து கிராமமக்கள் போராட்டம்

நாகை நகராட்சியை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம்

நாரைக்கிணறு பகுதியில் மக்கள் சந்திப்புக் கூட்டம்: அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்பு

முன்னாள் படை வீரா் நல அலுவலக வாகனம் டிச.30-இல் ஏலம்

SCROLL FOR NEXT