குறள் பாட்டு
இந்த மூன்று தன்மையும் தலைவனிடம் இருந்தால்
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:15 AM
குற்றங்கடிதல்
இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
-திருக்குறள்
கொடுத்து உதவாத தன்மையும்
மாண்பில்லா மானமும்
எல்லையில்லா மகிழ்ச்சியும்
தலைவனைச் சேரக் கூடாது
இந்த மூன்று தன்மையும்
தலைவனிடம் இருந்தால்
எந்தப் புகழும் இல்லையே
எல்லாம் குற்றம் ஆகுமே.