குறள் பாட்டு
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:39 AM
அருள் உடைமை
நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
-திருக்குறள்
நல்ல வழியை நாடிடு
நல்லவற்றைச் செய்திடு
பரந்த மனம் கொண்டிரு
கருணை அருள் கடைப்பிடி
எத்தனை எத்தனை வழிகளில்
ஆய்ந்து தேர்ந்து பார்த்தாலும்
அருள் ஒன்றே உலகிலே
நல்ல துணை ஆகுமே.