குறள் பாட்டு
நன்மை செய்யும் சொல் எது என்று தேடிப் பேசிடு
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:47 AM
வாய்மை
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
-திருக்குறள்
உண்மையைச் சொல்வதால் ஒருவர்க்குத்
துன்பம் நேரும் என்றிருந்தால்
உண்மை பேசிப் பயனில்லை
பொய்யுங் கூடப் பேசலாம்
நன்மை செய்யும் சொல் எது
என்று தேடிப் பேசிடு
தீமை செய்யும் என்றிருந்தார்
உண்மையைக் கூட மறைக்கலாம்.