பிள்ளையார்...
ஆனை வடிவப் பிள்ளையார் அவல்பொரி தின்னும் பிள்ளையார் பானை வயிறு பிள்ளையார் பரமனின் செல்லப் பிள்ளையார்! வேதம் எழுதிய பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் மோதகம் விரும்பும் பிள்ளையார் முனிவரும் வணங்கு
ஆனை வடிவப் பிள்ளையார்
அவல்பொரி தின்னும் பிள்ளையார்
பானை வயிறு பிள்ளையார்
பரமனின் செல்லப் பிள்ளையார்!
வேதம் எழுதிய பிள்ளையார்
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
மோதகம் விரும்பும் பிள்ளையார்
முனிவரும் வணங்கும் பிள்ளையார்!
தும்பிக்கை உடைய பிள்ளையார்
துயரம் தீர்த்திடும் பிள்ளையார்
நம்பிக்கை தந்திடும் பிள்ளையார்
நம்மைக் காத்திடும் பிள்ளையார்!
அறிவு கொடுக்கும் பிள்ளையார்
அவ்வை வணங்கிய பிள்ளையார்
முருகனின் அண்ணனே பிள்ளையார்
முன்வினை தீர்த்திடும் பிள்ளையார்
தொழிலைத் தந்தவர் பிள்ளையார்
தொடங்கி வைப்பவர் பிள்ளையார்
மொழியை வளர்த்தவர் பிள்ளையார்
மோட்சம் அளிப்பவர் பிள்ளையார்!