குறள் பாட்டு
பணமிருக்கும் நேரத்தில் பலரும் சூழ்ந்திருப்பார்கள்
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:40 PM
சுற்றம் தழால்
விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா
ஆக்கம் பலவும் தரும்.
-திருக்குறள்
பணமிருக்கும் நேரத்தில்
பலரும் சூழ்ந்திருப்பார்கள்
எப்பொழுது விரும்பிடும்
சுற்றமிருந்தால் நன்மையே
விருப்பம் குறைந்துபோகாத
சுற்றமிருந்தால் ஒருவர்க்கு
வளர்ச்சிகுன்றா நன்மைகள்
வந்துசேர்ந்து நிரைந்திடும்.