குறள் பாட்டு
ஒருவர் சொன்னதை ஒருவரிடம்எடுத்துச் சொல்ல வேண்டுமென்றால்
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:38 AM
தூது
(பொருட்பால் - அதிகாரம் 69 - பாடல் 2)
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுஉரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று
-திருக்குறள்
ஒருவர் சொன்னதை ஒருவரிடம்
எடுத்துச் சொல்ல வேண்டுமென்றால்
துன்பம் செய்யாத அன்புவேண்டும்
தூய கல்வி அறிவுவேண்டும்
உணர்ந்து புரிந்து கொள்கின்ற
வகையில் சொல்லும் சொல்வளம்
அமைந்திருக்க வேண்டுமே
அவன்தான் அரச தூதனே.
குறள் பாட்டு