குறள் பாட்டு
அன்னையின் வயிற்றில் எல்லோரும்பிறந்து வளர்ந்து வாழ்கிறோம்
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:58 AM
பெருமை
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். - திருக்குறள்
அன்னையின் வயிற்றில் எல்லோரும்
பிறந்து வளர்ந்து வாழ்கிறோம்
பிறப்பு என்பதில் பேதமில்லை
எல்லார்க்கும் பொதுவானதே
செய்யும் தொழிலில் உயர்வு தாழ்வு
வேறு பாடுகள் உள்ளன
அந்த அழுக்குப் புத்தியால்
சிறப்புச் சேர்வதில்லை.