குறள் பாட்டு
உடல் ஊக்கம் குன்றலாம்உள்ளம் குன்றக் கூடாது
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:23 PM
ஊக்கம் உடைமை
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
-திருக்குறள்
உடல் ஊக்கம் குன்றலாம்
உள்ளம் குன்றக் கூடாது
உள்ளம் உறுதி கொண்டிருந்தால்
நிலைத்த உடைமை ஆகுமே
எத்தனை பொருள் இருந்தாலும்
என்றும் நிலைத்து நிற்பதில்லை
ஒருநாள் அவை போய்விடும்
ஊக்கம் ஒன்றே நிலைத்திடும்.