குறள் பாட்டு
பிறரின் பொருளை விரும்பியே கள்ளத்தனமாய்க் கவர்ந்திட
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:35 PM
கள்ளாமை
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
-திருக்குறள்
உள்ளத்தினால் ஒரு பொருளை
அடைய ஆசைகொள்வது
தீமையான செயலது
தெரிந்து கொள்வாய் நற்செயல்
பிறரின் பொருளை விரும்பியே
கள்ளத்தனமாய்க் கவர்ந்திட
உள்ளத்தினால் நினைப்பதும்
தீமையான செயலன்றோ.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்