குறள் பாட்டு
எல்லோரும் விரும்பும் அளவிலேசெழித்துப் பொருள் நிறைவது
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:41 PM
நாடு
(பொருட்பால் - அதிகாரம் 74 - பாடல் 2)
பெரும் பொருளால் பெட்டக்கதாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.
மழை வளம் குன்றாமல்
மற்ற கேடுகள் இல்லாமல்
இயற்கை அழிவு இல்லாமல்
ஏராளம் விளைவது இனிது
எல்லோரும் விரும்பும் அளவிலே
செழித்துப் பொருள் நிறைவது
நாட்டுக்கு நன்மை ஆகிடும்
போற்றும் நாடாய்ப் புகழ்பெறும்.