முகப்பு
சிறுவர்மணி

சின்னக் கைகள் வரைந்த சித்திரங்கள்!

துறுதுறு என்றால் சரியான துறுதுறு சாய் சூர்யா. ஓர் இடத்தில் நின்று பதில் சொல்வதில்லை.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:39 AM
பகிர்:

சாய் சூர்யாவும் ஸ்ரீவர்ஷாவும் இரட்டைக் குழந்தைகள். இருவருமே அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் ஏழாவது படிக்கிறார்கள். துறுதுறு என்றால் சரியான துறுதுறு சாய் சூர்யா. ஓர் இடத்தில் நின்று பதில் சொல்வதில்லை. ஓட்டமும் துள்ளலும்தான்.
 இருவரும் ஓவியம் வரைவதில் அசாத்திய ஆர்வம் காண்பித்ததால், பெற்றோர் அவர்கள் இருவரையுமே "தபஸ்யா ஸ்கூல் ஆப் ஆர்ட்'ஸில் சேர்த்து ஓவியம் பயிலத் தூண்டினார்கள். ""படிப்பு முக்கியம்தான். ஆனால் ஓவியத் திறமை எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை அல்லவா?! அதேசமயத்தில் இரண்டு பேருமே படிப்பிலும் கெட்டிக்காரர்கள்தாம்'' என்கிறார் இந்த இரட்டையரின் தாயார்.
 எல்டாம்ஸ் ரோடு ஸ்ரீபார்வதி ஆர்ட் காலரியில் சுமார் நூறு ஓவியங்களைப் பார்த்த போது வியப்பாக இருந்தது. அத்தனையும் வண்ணப்படங்கள். எல்லாம் ஸ்ரீவர்ஷா வரைந்தவை. ராஜஸ்தானி பெண், கேரளப் பெண் எல்லாம் பார்த்து வரைந்தாராம். ஆயில் பெயிண்டிங்குகள் எல்லாமே நன்றாக இருந்தன.
 ""நான் போட்டதெல்லாம் பென்சில் ஸ்கெட்ச்...'' என்கிறான் சாய் சூர்யா.
 ஐந்து வருடங்களாக ஓவியம் கற்று வரும் இந்த சுட்டிகள், வார விடுமுறை நாட்களில் ஓவியம் பயின்று வந்தார்களாம். மாலை நேரங்களில் பள்ளிவிட்டு வந்த பிறகு, உட்கார்ந்து ஆர்வத்துடன் வரையத் தொடங்குவார்களாம். பெற்றோர் தந்த ஊக்கம்
 கைகொடுத்திருக்கிறது.
 ஓவியம் தவிர வேறு என்ன தெரியும் இருவருக்கும்?
 ""நான் கீ போர்டு கற்றுக்கொண்டு வருகிறேன். நன்றாக வாசிப்பேன்...'' என்கிறான் சாய் சூர்யா.
 ""நான் பரதநாட்டியம் கற்றுக்கொண்டு வருகிறேன். பார்வதி பாலசுப்பிரமணியம் அவர்கள்தான் என் குரு'' என்கிறார் ஸ்ரீவர்ஷா.
 வண்ணங்கள் மிதமாக இருக்கின்றன. வடிவங்கள் கச்சிதமாக இருக்கின்றன. நவீன பிள்ளையார் வடிவம் எளிதாக வரைய வந்ததாம். ""அதைத்தான் முதலில் வரைந்தேன்'' என்கிறார் ஸ்ரீவர்ஷா.
 ""பள்ளியின் தலைமை ஆசிரியரே வந்து ஓவியக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்'' என்று பெருமையுடன் தெரிவித்தார் இரட்டையரின் தாயார். பரவாயில்லை, படிப்புக்கு அப்பாற்பட்ட திறமை இருந்தால் அதை ஊக்குவிக்கும் மனப்பான்மையைப் பாராட்ட வேண்டும்.

 

முழு கட்டுரையைப் படிக்க →