முகப்பு
சிறுவர்மணி

புதியன கண்டுபிடி...

 சிந்திக்க சிந்திக்க புதுமைவரும் சிறிதோ பெரிதோ பயனைத்தரும்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:39 AM
பகிர்:

 சிந்திக்க சிந்திக்க புதுமைவரும்
 சிறிதோ பெரிதோ பயனைத்தரும்
 முந்தைய வாழ்வின் சிரமத்தை
 முழுதாய் நீக்கி நன்மைதரும்
 பறவையை ஆராய்ந்து ரைட்சகோதரர்
 பாடு பட்டே கண்டறிந்தார்
 சிரமமின்றி பறந்திடவே
 சிறிய விமானம் வடிவமைத்தார்
 எதிரொலி கேட்ட மார்க்கோனி
 ஏனிந்த சத்தம் ஆராய்ந்தார்
 புதிதாய் தந்த வானொலியால்
 புவியில் எங்கும் ஒலிதந்தார்
 ஏட்டில் எழுதும் சிரமத்தை
 எளிதாய் நீக்கினார் வாட்டர்மென்
 நோட்டில் எழுதும் பேனாவால்
 நாட்டில் கல்வியை வளர்த்திட்டார்
 நீயும் தினமும் யோசித்தே
 நினைவில் புதுமையாய் கண்டறிவாய்
 பாயும் அறிவு உன்னுள்ளே
 பகுத்து புதுமை படைத்திடுவாய்!

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.