குறள் பாட்டு
சோம்பல் நம்மை அண்டாமல் சோம்பல் சோம்பிக் கிடந்திட
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:15 PM
மடியின்மை
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
-திருக்குறள்
குடும்பம் சிறந்து விளங்கிட
இடைவிடாது உழைத்திட
சோம்பல் நீக்கவேண்டுமே
சுறுசுறுப்பு வேண்டுமே
சோம்பல் நம்மை அண்டாமல்
சோம்பல் சோம்பிக் கிடந்திட
முயற்சி செய்ய வேண்டுமே
சோம்பல் முடங்கிப் போகுமே.