குறள் பாட்டு
நடுவு நிலைமை தவறிட நாணம் கொள்ளும் நல்லவர்
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:19 PM
வெஃகாமை
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
-திருக்குறள்
நடுவு நிலைமை தவறாமல்
நன்மை பேணி வாழ்பவர்
தீய பயன் தந்திடும்
பொருளை விரும்ப மாட்டார்கள்
நடுவு நிலைமை தவறிட
நாணம் கொள்ளும் நல்லவர்
இழிவு தரும் பிறர்பொருள்
நாடிப் பழியில் வீழ்ந்திடார்.