அதிசய எரிபொருள்!
கடந்த மார்ச் மாதம் ஹாலந்து நாட்டின் கே.எல்.எம். விமானம் ஒன்று நியூயார்க்கிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நகருக்குப் பறந்தது.
கடந்த மார்ச் மாதம் ஹாலந்து நாட்டின் கே.எல்.எம். விமானம் ஒன்று நியூயார்க்கிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நகருக்குப் பறந்தது. இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்கிறீர்களா?
அந்த விமானத்தில் பயன்படுத்திய எரிபொருள்தான் அதிசயம்! அது என்ன? விமானங்களில் பயன்படுத்தும் வழக்கமான எரிபொருளுடன் 25 சதவீதம் சமையல் எண்ணெயும் அந்த விமானத்தில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. அதுவும் ஏற்கெனவே சமைக்கப் பயன்படுத்திய எண்ணெய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு பிரபல உணவகம் பயன்படுத்திய சமையல் எண்ணெயை மொத்தமாக வாங்கி, சுத்திகரித்து கே.எல்.எம். விமானங்களில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் நியூயார்க்கிலிருந்து ஆம்ஸ்டர்டாம் சென்று திரும்பும் விமானத்தில் இது பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப்படும் என இந்த விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. 75 சதவீதம் விமானத்தில் பயன்படுத்தப்படும் பெட்ரோல். மீதமுள்ள 25 சதவீதம் சமையல் எண்ணெய். அதிலும் ஏற்கெனவே சமையலுக்குப் பயன்
படுத்திய எண்ணெய். அடுத்த 6 மாதங்களுக்கு இந்த சோதனை ஓட்டம் நடைபெறும்.
சமையல் எண்ணெயைப் பயன்படுத்துவதால் 80 சதவீத அளவுக்கு கரியமில வாயு வெளிப்படுவது குறைகிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.