குறள் பாட்டு
யாருக்கும் துன்பம் செய்யாமல் இருத்தல் ஒன்றே மாசற்றவர்
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:12 PM
இன்னா செய்யாமை
கறுத்தின்னா செய்தவக் கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
-திருக்குறள்
பொறாமை எண்ணம் கொண்டு
ஒருவன் துன்பம் செய்தாலும்
திருப்பித் துன்பம் செய்யாதே
தீயவனாக மாறாதே
யாருக்கும் துன்பம் செய்யாமல்
இருத்தல் ஒன்றே மாசற்றவர்
கொள்கையாகப் போற்றுவார்
கோடானகோடி நன்மையதே