குறள் பாட்டு
இடம் தெரிந்து பேசிடுநிலை அறிந்து பேசிடு
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:29 PM
அவை அறிதல்
இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின்
நடை தெரிந்த நன்மையவர்.
-திருக்குறள்
இடம் தெரிந்து பேசிடு
நிலை அறிந்து பேசிடு
இடையில் புகுந்து பேசுவது
நன்மை யென்றால் பேசிடு
சொல்லின் தன்மை உணர்ந்திடு
சபை யறிந்து பேசிடு
தேர்ந் தெடுத்த சொற்களைப்
பேசி நல்லபயன் பெறு.