முகப்பு
சிறுவர்மணி

புதுச்சட்டை!

அம்மாவுடன் கடைக்குப் போனேன்அழகாய்ச் சட்டை வாங்கவே

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:34 PM
பகிர்:

 அம்மாவுடன் கடைக்குப் போனேன்
 அழகாய்ச் சட்டை வாங்கவே
 பொம்மை இரண்டு வாசலில்
 பல்லைக் காட்டிச் சிரித்தது
 
 வாங்கவாங்க என்று சொல்லி
 வணக்கம் வைத்து அழைத்தது
 நாங்கள் சென்ற நேரத்தில்
 நிறையக் கூட்டம் கடையிலே
 
 அடுக்கடுக்காய் சட்டை எல்லாம்
 அதிகம் அங்கே இருந்தன
 பிடித்தமான சட்டையொன்றைப்
 பார்த்து எடுக்கத் தேடினேன்
 
 பருத்தி நூலால் நெய்தசட்டை
 பார்க்க அழகாய் இருந்தது
 கருப்புக் கட்டம் போட்டசட்டை
 கண்ணை மிகவும் கவர்ந்தது
 
 புதுமையான சட்டையொன்றைப்
 போட்டுப் பார்த்து வாங்கினேன்
 பள்ளிக் கூடம் போகும்போது
 புதிய சட்டை போடுவேன்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.