குறள் பாட்டு
அன்பு நெஞ்சில் இல்லாமல் நல்ல துணை இல்லாமல்
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:24 AM
பகைமாட்சி
அன்பில னான்ற துணையிலன் றான்றுவ்வா
னென்பரியு மேதிலான் றுப்பு
-திருக்குறள்
அன்பு நெஞ்சில் இல்லாமல்
நல்ல துணை இல்லாமல்
வலிமையற்று இருப்பவன்
வாழ்வில் வெற்றி இல்லையே
அன்பு, துணை, வலிமையை
இழந்துவிடக் கூடாது
அந்த மூன்றைக் கொண்டுதான்
பகைவர் வலிமை வெல்லலாம்.