ஹால்மார்க். இதற்காக இந்திய தர நிர்ணயக் கழகத்தில் அதற்கென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். தேசிய அளவில் உள்ள சட்டங்களை அனுசரித்து, உரிமம் பெற்றபின் தங்கம் மற்றும் உலோக நகைகளை கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களுக்கு எடுத்துச்சென்று, ஹால்மார்க்கிங் செய்வதற்காகக் கொடுக்க வேண்டும். ஆபரணங்களில் ஹால்மார்க்கிங் செய்வதற்குரிய அதிகாரம் நகை வியாபாரிக்குக் கிடையாது. மாறாக, இந்தக் குறிப்பிடப்பட்ட நிலையங்களுக்குத்தான் அதற்குரிய அதிகாரம் உண்டு. இந்த மையங்கள் தங்கத்தின் மதிப்பை பரிசோதனை செய்த பின்னர், ஒவ்வொரு தங்க நகையிலும் அதன் தரத்திற்கேற்றவாறு, அதன் மாற்றை முத்திரை இடுவார்கள். இந்த மையங்களுடைய செயல்களையும் இந்திய தர நிர்ணயக் கழகம் கண்காணிக்கும். இந்த மையங்களின் செயல்பாடுகள் கழகத்தின் மேற்பார்வைக்குட்பட்டதாகும். ஹால்மார்க்கிங் செய்யப்பட்ட நகைகளில் ஐந்து விதமான அடையாளங்கள் இடப்படுகின்றன.
நாளுக்கு நாள் விலைவாசி மட்டும் அல்ல. அதோடு சேர்ந்து என்னதான் விலை ஏறினாலும் மக்கள் கண்டிப்பாக வாங்கும் ஒரு பொருள்தான் தங்கம். தனித்த நிலையில் கிடைக்கும் உலோகங்களில் முதலிடம் வகிப்பதும், ஆதிகாலத்தில் இருந்தே மனிதனால் மதிப்புமிக்கதாகக் கருதப்படுவதும் இதுதான். இன்றைய பொருளாதார நிலையில் தங்கத்தின் கையிருப்பைக் கொண்டுதான் ஒரு நாட்டின் செல்வாக்கே மதிப்பிடப்படுகிறது என்றால் இதன் அருமை பெருமைகளைச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.
நாகரிக வளர்ச்சியில் நாம் தங்கத்தை உபயோகித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். அத்தியாவசியம் இல்லாவிட்டாலும், இந்த உயர் உலோகம் மக்களின் வாங்கும் திறனுக்கும் அப்பாற்பட்டு வாங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
இந்தியர்கள் மட்டுமே சமீபகாலம் வரை இதன் மேல் மோகம் கொண்டிருந்தார்கள். எனினும், இப்போதைய நிலையில் உலக நாடுகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு இந்த உலோகத்தை வாங்கி தங்கள் கையிருப்பில் வைத்துக்கொள்கின்றன.
நம்மூர்க் கடைக்காரர்கள் ஏற்கெனவே நஷ்டமில்லாத வியாபாரமாக நடந்துகொண்டிருக்கும் இதன் வியாபாரத்தை அதிகரிப்பதற்காக சிறப்பு தினங்கள், திதிகள் என்றும் சொல்லி சிறப்புத் தள்ளுபடி என்று சொல்லி மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க முயல்கிறார்கள்.
ஆனால் எப்போது தங்கம் வாங்கப்போனாலும், எல்லா விளம்பரங்களிலும்கூட ஹால்மார்க் என்ற சொல் தற்போதெல்லாம் தவறாமல் இடம்பெற்று வருகிறது. ஹால்மார்க் என்றால் என்ன? அதோடு சேர்த்துச் சொல்லப்படும் 916 தங்கம் என்றும் சொல்லப்படுகிறதே. இதன் அர்த்தம் என்ன?
தங்க ஆபரணங்களின் தூயதன்மை பற்றியும், பொதுமக்களை கலப்படம் செய்யப்பட்டு விற்கப்படும் தங்க நகைகளை வாங்குவதில் இருந்து பாதுகாப்பதற்கும் ஏறக்குறைய 800 வருடங்களுக்கு முன்பு, பிரிட்டனில்தான் இந்த ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
அன்றைய சட்டங்களுக்கேற்ப வியாபாரிகள், நகைகளின் பிற உலோகங்களின் சேர்ப்பை ஒரு ஹாலில் வைத்து, எல்லோருக்கும் தெரியும்படி செய்தபின், ஆபரணங்களில் அதன் கலப்பைப் பற்றி முத்திரை இட்டு பின்னரே வணிகம் செய்ய வேண்டும். ஹாலில் வைத்து தங்க நகைகளை முத்திரையிட்டு பிறகு வியாபாரம் செய்ததனால் இதற்கு "ஹால் மார்க்கிங்' என்று பெயர் வந்தது. இந்தியாவில் ஹால்மார்க்கிங்கை நடைமுறைப்படுத்த, இந்திய அரசு பொறுப்பை ஒப்படைத்திருப்பது இந்திய தர நிர்ணயக் கழகத்திடம் Bereau of Indian Standards (BIS) ஆகும். நாட்டில் பல்வேறு பாகங்களில் உள்ள இந்தக் கழகத்தின் அலுவலகங்களின் வழியாக, இந்த ஹால்மார்க்கிங் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஹால்மார்க்கிங் 916 தங்க நகைகளுக்கு மட்டும்தான் தரப்படுகிறது என்ற தவறான நம்பிக்கை மக்களிடையே இருந்து வருகிறது. ஹால்மார்க்கிங் செய்வதற்கென்று தரப்படுத்தப்பட்டுள்ள ஆறு வகை காரட் பிரிவுகள் பின்வருமாறு:
தங்க நகைகளுக்கு ஹால்மார்க்கிங் செய்ய விரும்பும் வணிகர் இந்தியத் தர நிர்ணயக் கழகத்திடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
1. BIS தர நிர்ணயக் கழகத்தின் சின்னம்.
2. தங்கத்தின் தூயதன்மை அல்லது மாற்று. உதாரணமாக 22 காரட் தங்கத்தில் 916 என்று முத்திரை வைக்கப்பட்டு இருக்கும். 21 காரட் தங்க நகையில் 875 என்றும் முத்திரையிடப்பட்டு இருக்கும்.
3. மதிப்பிடும் மற்றும் ஹால்மார்க்கிங் செய்யப்படும் மையத்தின் சின்னம். ஆபரணங்களுடைய மாற்று பற்றி பரிசோதிக்கவும், ஹால்மார்க் செய்யவும் BIS கழகத்தின் அங்கீகாரம் பெற்ற மையத்தின் சின்னம்.
4. ரகசிய சின்னம். இதில் நகைகள் ஹால்மார்க் செய்யப்பட்ட வருடம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
5. BIS அங்கீகாரம் பெற்ற அணிகலன் வணிகருடைய சின்னம்.
ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் இந்த ஐந்து முத்திரைகளும் லேசர் கதிர்களால் உறுதியாக அடையாளம் இடப்பட்டு இருக்கும். ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகள் வாங்குவதால் நுகர்வோருக்கு எவ்விதமான பயன்கள் கிடைக்கும்?
ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை நுகர்வோர் வாங்குவதால் கொடுக்கும் விலைக்குச் சமமான மதிப்புள்ள, தரமான தங்க ஆபரணங்கள் கிடைக்கும். அதோடு மட்டுமல்லாமல் மாற்று குறைவான தங்கத்தை வாங்கி ஏமாற்றப்படுவதில் இருந்து நுகர்வோர் பாதுகாக்கப்படுகின்றனர். இந்தியாவில் ஹால்மார்க்கிங் ஒரு கட்டாயமான சட்டம் இல்லை. விரும்பும் வியாபாரிகளுக்கு மட்டும் செய்து தரப்படும் திட்டம் ஆகும் இது.
BIS அங்கீகாரம் உள்ள தங்க நகைக்கடைகளில், ஹால்மார்க் முத்திரையுள்ளதும், முத்திரை இடப்படாத நகைகளும் விற்கப்படுவதைக் காணலாம். ஆகையினால் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே நீங்கள் வாங்குவது என்று தீர்மானம் செய்துகொண்டால், முன்பு சொல்லப்பட்ட எல்லா அடையாளங்களும் நகைகளில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வோர் ஊரிலும் ஆஐந அங்கீகாரம் பெற்ற நகை வியாபாரிகளைப் பற்றி அறிந்துகொள்ள இந்திய தர நிர்ணயக் கழகத்தின் இணையதளத்தில் சென்று பார்க்கவும்.
அதன் முகவரி -
www.bis.org.in
23 காரட் அதாவது 958
22 காரட் அதாவது 916
21 காரட் அதாவது 875
17 காரட் அதாவது 708
18 காரட் அதாவது 750
14 காரட் அதாவது 585
9 காரட் அதாவது 375
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.