1. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டுவிட்டு உள்ளே உள்ளதை வெளியே எறிந்தான். அது என்ன?
2. முழு உலகமும் சுற்றி வரும். ஆனால் ஒரு மூலையிலேயே
இருக்கும். அது என்ன?
3. ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன். ஆனால் நீரைக் குடிக்கத் தந்தால் இறந்து விடுவேன். நான் யார்?
4. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும்,
கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமை இருக்கும், சங்கீதம்
தெரியாது. அது என்ன?
5. விடிய விடிய பூந்தோட்டம். விடிந்து பார்த்தால்
வெறுந்தோட்டம். அது என்ன?
6. தொப்பி போட்ட காவல்காரன். உரசி விட்டால் சாம்பல் ஆவான். அவன் யார்?
7. மூடிய வெள்ளைக் கிணற்றுக்குள் மஞ்சள் நிலா. அது என்ன?
8. கிண்ணம் போல பூ பூக்கும். பானை போல காய் காய்க்கும்.
அது என்ன?
9. பாட்டி வீட்டுத் தோட்டத்தில் தொங்குகின்ற பாம்புகள்.
அது என்ன?
10. கீழே ஊற்றிய தண்ணீர், மேலே தொங்கி இனிக்குது.
அது என்ன?
விடைகள்:
1.சோளம் 2.அஞ்சல் தலை 3.நெருப்பு 4.குயில் 5.வானத்து
நட்சத்திரங்கள் 6.தீக்குச்சி
7.முட்டை 8.பூசணிக்காய்
9.புடலங்காய் 10.இளநீர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.