போதனை
அந்த ஆஸ்ரமத்தில் ஒருநாள், குருநாதர் ஒரு பானையைக் கவிழ்த்து வைத்து "இதற்குள் என்ன இருக்கிறது!' என்று கேட்டார். முதல் சிஷ்யன் "ஒன்றுமில்லை' என்றான்.
அந்த ஆஸ்ரமத்தில் ஒருநாள், குருநாதர் ஒரு பானையைக் கவிழ்த்து வைத்து "இதற்குள் என்ன இருக்கிறது!' என்று கேட்டார். முதல் சிஷ்யன் "ஒன்றுமில்லை' என்றான். இரண்டாவது சிஷ்யன் பானைக்குள் கையை விட்டுப் பார்த்து "ஒன்றுமில்லை' என்றான். மூன்றாவது சிஷ்யன் "பானைக்குள் காற்று இருக்கிறது' என்றான். குருநாதர் "சரி, இந்தக் காற்றை எப்படிப் பிரித்தெடுப்பது?'
என்றார். முதல் மூவர்களும் கொஞ்சம் யோசித்துப் பார்த்து, "சாத்தியமில்லை' என்றார்கள். மூன்றாவது சிஷ்யன் பானையில் தண்ணீர் நிரப்பினால் காற்று வெளியே போய்விடும்' என்றான்.
குருநாதர் சொன்னார் - "இப்படித்தான் மனதில் உள்ள தீய எண்ணங்களைப் போக்க, நல்ல எண்ணங்களைப் புகுத்த வேண்டும். நல்லதையே நினைக்க, நினைக்க அவை மனதில் நிரம்பி, கெட்ட எண்ணங்கள் வெளியேறி விடும்'.
Advertisement