திருமலை நாயக்கர் மஹால்!
இந்த அரண்மனையை தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் எல்லா மொழித் திரைப்படங்களிலும் அடிக்கடி நீங்கள் கண்டு களித்திருக்கலாம்! மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக மதுரையின் மிக முக்கியமான சுற்றுலாத்தலம் திருமலை நாயக்கர் மஹால் ஆகும்.
சிறுவர்மணிதிருமலை நாயக்கர் மஹால்!

இந்த பிரம்மாண்டமான மாளிகை கி.பி. 1636ஆம் ஆண்டு கட்டப்பட்டது! மதுரையை கி.பி. 1623 முதல் கி.பி. 1659 வரை ஆட்சி செய்த மன்னர் திருமலை நாயக்கரால் இவ்வரண்மனை கட்டப்பட்டது! இம்மாளிகை திராவிட மற்றும் முகமதிய கட்டிடக் கலையின் எழில் மிகு கலவையாகும்! இன்று நாம் காணும் கட்டிடமே மன்னர் திருமலை நாயக்கர் வாழ்ந்த இல்லமாகும்! இக்கட்டிடத்தைக் கண்டு களிக்கும் அயல் நாட்டினர் தொழில் நுட்ப வசதிகள் ஏதுமற்ற அன்றைய காலகட்டத்தில் நேர்த்தியாக வடிவமைத்த தமிழர்களின் சிறப்பை வியந்து பாராட்டுகிறார்கள்!
இம்மாளிகை மீனாட்சி அம்மன் கோவிலுக்குத் தென் கிழக்கே 2கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இம்மாளிகை "சொர்க்க விலாஸம்'....,"ரங்க விலாஸம்' என் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது! இம்மாளிகைக்குள்ளேயே மன்னர் தங்குமிடம், அரசியார் தங்கும் இடம், சிறு வழிபாட்டுத்தலம், வெடிமருந்துக் கிடங்கு, ஆயுதத் தளவாட அறை, சிறுகுளம், தோட்டம் போன்றவை அமைக்கப்பட்டு நேர்த்தியாக நிர்வகிக்கப்பட்டன.
இம்மாளிகையின் அழகே இதில் உள்ள அழகான தூண்கள்தான்! இத்தூண் 13 மீட்டர் உயரம் கொண்டவை! மேலும் நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் கொண்டதாக இம்மாளிகை அமைந்திருப்பது இதன் மற்றோர் சிறப்பம்சம் ஆகும்.
இம்மாளிகை தற்பொழுது தமிழகத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது! இம்மாளிகையில் இரவு நேரத்தில் சிறப்பு ஒளி, ஒலி ஏற்பாடுகள் மூலம் சிலப்பதிகாரத்தின் சில பகுதிகள் நாடக வடிவத்தில் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சி தமிழ் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகள் மாலை 6.30 மணி முதல் 9.00 மணி வரை வழங்கப்படுகின்றன.