முகப்பு
சிறுவர்மணி

தீர்க்க தரிசனம்!

மராட்டிய வீரர் சிவாஜி ஒரு சமயம் தன் குருவாகிய ராமதாசருக்கு பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:07 AM
பகிர்:

மராட்டிய வீரர் சிவாஜி ஒரு சமயம் தன் குருவாகிய ராமதாசருக்கு பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினார். ராமதாசர் அவற்றைப் பெற்றுக்கொண்டு பதிலுக்குக் கையளவு மண், சில கூழாங்கற்கள், கொஞ்சம் குதிரைச் சாணம் ஆகியவற்றைச் சிவாஜிக்குக் கொடுத்தனுப்பினார்! அவைகளைப் பார்த்த சிவாஜியின் அன்னை சினம் அடைந்தார்!

அப்போது சிவாஜி, ""அம்மா இவையெல்லாம் குருதேவரின் தீர்க்க தரிசனத்தைக் காட்டுகின்றன.'' என்றார்!

""எப்படி?'' என்று கேட்டார் சிவாஜியின் அம்மா.

அதற்கு சிவாஜி, ""இந்த மண் மொகலாயரின் ஆதிக்கத்திலிருந்து நாடு முழுவதையும் ஜெயிப்பேன்..என்பதைக் குறிக்கிறது. கூழாங்கற்கள் வலிமை மிக்க கோட்டைகளால் பாதுகாப்பேன்...என்பதைக் காட்டுகிறது...இந்தச் சாணம் எண்ணற்ற மாவீரர்கள் அடங்கிய பெரிய குதிரைப்படையை அமைப்பேன்...என்பதை உணர்த்துகிறது!''

என்றார்! இதைக்கேட்டு வியந்தார் அன்னை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.