நகைச்சுவை!
குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா ஒரு திருமணத்திற்குச் சென்றபோது அவரை வற்புறுத்தி சாப்பிட வைத்தனர். கவிஞர் பலவற்றைத் தவிர்த்து சிலவற்றை மட்டும் உண்ணலானார்.
குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா ஒரு திருமணத்திற்குச் சென்றபோது அவரை வற்புறுத்தி சாப்பிட வைத்தனர். கவிஞர் பலவற்றைத் தவிர்த்து சிலவற்றை மட்டும் உண்ணலானார். அருகில் உபசரித்தவர் "ஏன் சாப்பாடு நன்றாக இல்லையா?' என வினவ அதற்கு கவிஞர் "சாப்பாடு முதல் தரம்!' "நான் இரண்டாம் தரம்' எனக் கூறி, அதற்கு விளக்கமாக, "நான் வீட்டிலேயே முதன்முதலில் சாப்பிட்டு விட்டேன்; இப்போது இரண்டாம் முறையாக இங்கே சாப்பிடுகிறேன்' என்றாரே பார்க்கலாம்!