முகப்பு
சிறுவர்மணி

கீரை!

கீரை நல்ல கீரைகேடு செய்யாக் கீரைசீரை வளர்க்கும் கீரைசெலவு குறைந்த கீரை

Updated On : 15 மே, 2015 at 3:49 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:01 AM

கீரை நல்ல கீரை

கேடு செய்யாக் கீரை

சீரை வளர்க்கும் கீரை

Advertisement

செலவு குறைந்த கீரை

பறிக்கப் பறிக்கத் தளிர்க்கும்

பச்சை வண்ணக் கீரை

செறிந்த உணவுக் கீரை

எளிதில் செரிக்கும் கீரை

சத்து மிகுந்த கீரை

உண்ணச் சுவைக்கும் கீரை

மத்து கொண்டு கடைந்தால்

மசியும் வெந்த கீரை

வல்லாரை அகத்தி முருங்கை

மணக்குந் தக்காளி சிறுகீரை

நல்ல பசலை முளைக்கீரை

நாடும் பொன்னாங்கண்ணி

வித விதமாய் கீரைக்கட்டைத்

தெருவில் கூவி விற்பர்!-அதனை

வாங்கி உண்டால் அறிவும் உடலும்

சக்தி கூடி வளரும்!

வீட்டில் தோட்டம் போட்டு

வேண்டும் கீரை வளர்ப்போம்!

பாட்டி கையால் பறித்துப்

பாங்காய்ச் சமைத்துத் தின்போம்!

உணவில் கீரை சேர்த்து

உடம்பில் வலுவைக் கூட்டு

பிணக்கம் கொள்ள வேண்டாம்

பெரியோர் கண்ட உண்மை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.