சிறுவர்மணி

நேர்மை!

வகுப்பில் பாடம் நடந்துகொண்டிருந்தது. நரேந்திரன் என்ற மாணவன் குறும்புத்தனம் செய்ய வகுப்பிலிருந்த எல்லா மாணவர்களும் சத்தம் போட்டு சிரித்துவிட்டனர்!

மு.கலிய பெருமாள்

வகுப்பில் பாடம் நடந்துகொண்டிருந்தது. நரேந்திரன் என்ற மாணவன் குறும்புத்தனம் செய்ய வகுப்பிலிருந்த எல்லா மாணவர்களும் சத்தம் போட்டு சிரித்துவிட்டனர்!

கோபமடைந்த ஆசிரியர் நடத்திக்கொண்டிருந்த பாடத்தில் ஒரு கேள்வியைக் கேட்டார்.

அனைவரும் பதில் தெரியாமல் விழித்தனர்! நரேந்திரன் மட்டும் சரியான பதிலைக் கூறினான். ஆசிரியர் மற்ற மாணவர்களைப் பார்த்து, ""பாடத்தைக் கவனிக்காமல் அரட்டையா அடிக்கிறீர்கள்? ஏறுங்கள் பெஞ்சு மேலே''என்று கூறினார். உடனே நரேந்திரன் பெஞ்சு மேல் ஏறினான்.

""நீதான் விடை கூறிவிட்டாயே..., எதற்கு பெஞ்சு மேல் ஏறுகிறாய்?''என்றார் ஆசிரியர்.

""என் குறும்புத்தனத்தால்தான் எல்லா மாணவர்களும் சிரித்தார்கள்..., தப்பு என்னுடையதுதான்'' என்று உண்மையைக் கூறினான் நரேந்திரன். ஆசிரியர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்து அவனது நேர்மையைப் பாராட்டினார். அந்த நரேந்திரன்தான் சுவாமி விவேகானந்தர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT