முகப்பு
சிறுவர்மணி

வாய்ப்புகள்!

புத்திசாலி தனக்குக் கிடைக்கிற வாய்ப்புகளைவிட அதிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வான்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:39 AM
பகிர்:

பொன்மொழிகள்

* ஒரு கதவு மூடப்படும்போது மற்றொரு கதவு திறக்கப்படுகிறது.

-அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்

* புத்திசாலி தனக்குக் கிடைக்கிற வாய்ப்புகளைவிட அதிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வான்.

- பேக்கன்

* இன்னல்களும் பிரச்னைகளும் நாம் வளர்ச்சி அடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை.

- அப்துல் கலாம்

* வாய்ப்புகள் வரும் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். வாய்ப்புகளைத் தேடிச் செல்பவர்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.

 - பெர்னார்ட் ஷா

* வாய்ப்புகள் வெளிப்படையாக நம்மை நாடி வராது. கடுமையான உழைப்பு என்ற மாறு வேடத்தில்தான் வரும்.

 - சிட்னி

* ஆற்றலிருந்தாலும் வாய்ப்புகள் இல்லாவிட்டால் அவை பயனற்றுப்

போய்விடும்.

- நெப்போலியன்

* அறிவுரை அநேகமாக ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. ஏற்றுக் கொள்ளாதவர்கள் வாய்ப்புகளை இழக்கின்றனர்.

-செஸ்டர் ஃபீல்ட் பிரபு

* எப்போதும் தயாராக இருங்கள். வாய்ப்புகள் எந்த நேரத்திலும் வரக்கூடும்.

- சங் எச் கிம்

* வாழ்க்கை என்பது வாய்ப்புகள் பலவற்றைக் கொண்ட நீண்டவரிசை.

- ஜான் பாக்கர்

* செயலும், வாய்ப்பும் சந்திக்கின்றபோதுதான் அதிர்ஷ்டம் நம்மை அணைக்கின்றது.

- ரேடி சேப்புள் ஜானியர்.

முழு கட்டுரையைப் படிக்க →