பொன்மொழிகள்
அன்பு நிறைந்த இன்சொல் இரும்புக் கதவுகளையும் திறக்கும்.
அன்பு நிறைந்த இன்சொல் இரும்புக் கதவுகளையும் திறக்கும்.
- ரொசட்டி
ஆலோசனை நல்லதாய் இருந்தால் அதைக் கூறியது யார் என்று கவலை வேண்டாம்.
Advertisement
- ஆவ்பரி
இறந்த காலத்தைப் பற்றி அழாதே! நிகழ்காலத்தில் ஒழுக்கத்துடன் இரு. எதிர்காலத்தைப் பற்றி பயப்படாதே.
- கோல்டன்
உயர்ந்த நோக்கங்கள் உயர்ந்த உள்ளங்களை அமைக்கின்றன.
- சிம்மன்ஸ்
உலகம் ஒரு கண்ணாடி. நாம் நகைத்தால் அது நகைக்கும்...,நாம் முகம் சுளித்தால் அதுவும் முகம் சுளிக்கும்.
- கோல்டன்.
எண்ணம் ஒரு மலர்! மொழி அதன் மொட்டு! செயல் அதன் கனி!
- பீச்சர்
எதற்கும் தயாராக இருப்பவனைத்தான் வாய்ப்புகள் தேடி வரும்.
- போவீ
எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறதோ அந்த வீட்டில்தான் உயிர் ஒளி இருக்கிறது. உலகில் இறவாத பொருள் புத்தகங்களே.
- சோயத்தே
ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இரு. நீ சுறுசுறுப்பாய் இருப்பதை நீயே உணர்வாய்!
- தாமஸ் புல்லர்
சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.
- ஹெர்பர்ட்