குடை எவ்வாறு தோன்றியது?
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே குடை கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆரம்ப கால குடைகள் யாவும் சூரியனின் வெப்பத்திலிருந்து மனிதனைக் காத்து, நிழலைத் தருவதற்காகவே பயன்படுத்தப்பட்டன. இப்படிப்பட்ட குடைகளை "பாராசோல்' என்று அழைத்தனர்.

4000ஆண்டுகளுக்கு முன்பு பழமையான சிரியா, சீனா, எகிப்து மற்றும் கிரேக்க நாடுகளில் குடைகள் உபயோகப்படுத்தப்பட்டன. முதலில் வெயிலுக்காக குடை பயன்படுத்தப்பட்டது.
சீனர்கள்தான் முதன் முதலில் மழை பெய்கையில் நனையாமல் வெளியே செல்வதற்காகக் குடையைப் பயன்படுத்தினர். மெழுகு, மரக்கோந்து போன்றவற்றை குடைத்துணியின் மீது எல்லா இடங்களிலும் பூசி, அதன் பிறகு அந்தக் குடையை மழை பெய்கையில், தலைக்கு மேலே தூக்கிச் செல்வர். வார்னிஷ் போன்ற ஒருவகை பெயின்டையும் அதற்காக சீனர்கள் பயன்படுத்தினர். தற்போது பயன்படுத்தி வரும் நவீன குடைகளுக்கு ஆதாரமாக, அடிப்படையாக விளங்குகிற குடையைக் கண்டுபிடித்தவர் "சாமுவேல் ஃபாக்ஸ்' என்ற ஆங்கிலேயர் ஆவார். இவர் குடைகள் தயாரிப்பதிலும் ஈடுபட்டார். சாமுவேல் ஃபாக்ஸ்தான் ஸ்டீல் கம்பிகள் பொருத்தப்பட்ட குடைகளை 1852ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.
Advertisement