கருவூலம்: நமது அரசாங்கம்!
இந்தியா ஒரு ஜனநாயக நாடாகும்! மக்களே, மக்களுக்காக நடத்துவதே மக்களாட்சியாகும். நமது சமூகம் பொது நன்மைக்காக சில சட்டங்களை வகுத்துள்ளது.
சிறுவர்மணிகருவூலம்: நமது அரசாங்கம்!
இந்தியா ஒரு ஜனநாயக நாடாகும்! மக்களே, மக்களுக்காக நடத்துவதே மக்களாட்சியாகும். நமது சமூகம் பொது நன்மைக்காக சில சட்டங்களை வகுத்துள்ளது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடாகும்! மக்களே, மக்களுக்காக நடத்துவதே மக்களாட்சியாகும். நமது சமூகம் பொது நன்மைக்காக சில சட்டங்களை வகுத்துள்ளது. அரசாங்கத்தை வழி நடத்த உதவுவது அரசியலமைப்புச் சட்டம் ஆகும். உலகிலேயே எழுதப்பட்ட ஆவணங்களுள் மிக நீளமானது இந்திய அரசியல் அமைப்புச் சட்டமாகும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், மத்திய அரசு, மாநில அரசு, மற்றும் மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வரும் யூனியன் பிரதேசங்களின் அதிகாரங்கள் யாவும் வரையறுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் நிர்வாகத்தில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு இடம் பெற்றுள்ளது.
மத்திய அரசு
நம் நாடு பரந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளதால் மத்திய அரசு, மாநில அரசு என்று இரு அமைப்புகள் செயல் படுகின்றன. நமது பாராளுமன்றம், மக்களவை (LOK SABHA), மாநிலங்களவை (RAJA SABHA) என இரு அவைகளைக் கொண்டுள்ளது.
மக்களவை (LOK SABHA)
மிக அதிக உறுப்பினர்களைக் கொண்ட அவை மக்களவை ஆகும். இதன் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 ஆகும். இதில் 543 பேர் மட்டும் மக்களால் தேர்தல் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். 2 உறுப்பினர்கள் மட்டும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படுகின்றனர்.
மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் இந்த அவையைப் பல காரணங்களால் இடையில் கலைத்து விடலாம். 25 வயது நிரம்பியவர்கள் மட்டுமே மக்கள் அவை உறுப்பினர் ஆக முடியும். மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்தியாவின் முதல் பெண் மக்களவைத் தலைவர், திருமதி மீரா குமார் ஆவார்.
இந்தியாவின் முதல் சபாநாயகர் திரு ஜி.வி.மெளலாங்கர் ஆவார்.
அட்டர்னி ஜெனரல், கன்ட்ரோலர், மற்றும் ஆடிட்டர் ஜெனரல், தேர்தல் ஆணையத்தின் முதன்மை இயக்குனர், மத்திய பணி வழங்கும் ஆணையத்தின் (UNION PUBLIC SERVICE COMMISSION) நிர்வாக இயக்குனர், பிற நாட்டுத் தூதரகங்களில் பணிபுரியும் இந்தியத் தூதர்கள் ஆகிய அனைவரையும் நியமிக்கும் அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவருக்கு மட்டுமே உண்டு.
மக்களவையைக் கலைக்கும் அதிகாரம் மற்றும் மாநில அரசுகள் கலைக்கப்படும் பொழுது ஆட்சி செலுத்தும் அதிகாரம் போன்றவை குடியரசுத் தலைவருக்குரிய சிறப்பு அதிகாரங்கள் ஆகும்.
யூனியன் பிரதேசங்கள்
மத்திய அரசு நேரடியாக, ஆட்சி செலுத்தும் பகுதிகள் "யூனியன் பிரதேசங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இதை நிர்வகிப்பவர் "துணை நிலை ஆளுனர்' என்று அழைக்கப்படுகிறார். மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்ட மன்றமும், முதல் அமைச்சர் மற்றும் அமைச்சரவைக் குழுவும் இடம் பெற்றிருக்கும்.
அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத் தீவுகள், சண்டிகர், டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, புதுச்சேரி, மற்றும் புதுதில்லி ஆகிய 7 யூனியன் பிரதேசங்கள் இந்தியாவில் உள்ளன.
மாநில அரசாங்கம்
மாநில அளவில் செயல்படும் அரசு மாநில அரசு ஆகும். சட்ட மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். மாநில சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தங்களின் சட்டமன்றத் தலைவரை தேர்வு செய்கிறது. அவரே "முதல் அமைச்சர்' ஆக ஆளுனரால் நியமிக்கப்படுகிறார். முதலமைச்சரின் ஆலோசனைப்படி பிற அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
உங்களுக்குத் தெரியுமா?
* இந்தியாவின் முதல் பெண் பிரதமர் திருமதி இந்திராகாந்தி ஆவார்.
* இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் ஆவார்.
* இந்தியாவில் மொத்தம் 4052 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன.
* இரண்டே இரண்டு மாவட்டங்களை மட்டுமே கொண்ட யூனியன் பிரதேசம் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகும்.
* தனி அரசியல் சட்டம் கொண்ட இந்திய மாநிலம் ஜம்மு காஷ்மீர் ஆகும்.
* இந்தியத் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளர், திருமதி கமல் தேவி சட்டோபாத்தியாயா.
* உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி திருமதி.பாத்திமா பீவி.
* இந்தியாவின் முதல் பெண் கவர்னர் திருமதி சரோஜினி நாயுடு ஆவார். இவர் பணிபுரிந்த மாநிலம் உத்திரப் பிரதேசம் ஆகும். இதுவரை 19 பேர் பெண் கவர்னர்களாகப் பணி புரிந்துள்ளனர்.