முகப்பு
சிறுவர்மணி

தொழில் பக்தி

நடிகர் சிவாஜி கணேசன் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அவர் "கட்டபொம்மன்' நாடகத்தில் நடித்த சமயம், ஒருமுறை சினிமா ஷூட்டிங்கை முடித்துவிட்டு, நாடக அரங்குக்கு வந்து, சக நடிகர்களுடன் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்.

Updated On : 5 மார்ச், 2016 at 3:53 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:12 PM

நடிகர் சிவாஜி கணேசன் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அவர் "கட்டபொம்மன்' நாடகத்தில் நடித்த சமயம், ஒருமுறை சினிமா ஷூட்டிங்கை முடித்துவிட்டு, நாடக அரங்குக்கு வந்து, சக நடிகர்களுடன் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த சபா நிர்வாகி, "நீங்கள் தொடர்ந்து இதே நாடகத்தில் நடித்து வருகிறீர்கள். சினிமாவிலும் நடித்து "நடிகர் திலகம்' என்று பட்டம் பெற்றுவிட்டீர்கள். இனியும் ஒத்திகை தேவைதானா! என்றார்.

சிவாஜி கணேசன் சிரித்துக்கொண்டே, "அந்தப் பட்டம் நிலைத்து நிற்க வேண்டுமல்லவா! அதற்காகத்தான்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.