அரங்கம்: ஒளி படைத்த கண்ணினாய்!
ஆசிரியர் வைத்தியநாதன்: மாணவர்களே....,அக்காலத்தில் தெரு விளக்கில் படித்து மேதையானோர் பலர்..., காரணம், மின்சாரம் வீடுகளுக்கு வழங்கப் படாத காலம்... தெருவில் எரிந்த விளக்கின் அடியில் அமர்ந்து படித்திருக்கிறார்கள்..
காட்சி - 1
இடம்: வகுப்பறை
மாந்தர்: ஆசிரியர் அனந்தவைத்தியநாதன், மாணாக்கர்கள் - அர்ஜுன், அரவிந்த்,
ஆனந்த், பரிதா, ராஜகணபதி மற்றும் பலர்.
ஆசிரியர் வைத்தியநாதன்: மாணவர்களே....,அக்காலத்தில் தெரு விளக்கில் படித்து மேதையானோர் பலர்..., காரணம், மின்சாரம் வீடுகளுக்கு வழங்கப் படாத காலம்... தெருவில் எரிந்த விளக்கின் அடியில் அமர்ந்து படித்திருக்கிறார்கள்..
அர்ஜுன்: சார்! கண்ணுக்கு அந்த வெளிச்சம் போதுமா படிக்க?.... வெளிச்சத்தை அளக்க ஏதும் அளவீடு உள்ளதா?
ஆசிரியர்: அது பற்றித்தான் நாம் இன்று தெரிந்து கொள்ளப் போகிறோம்! ஒரு விளக்கு அல்லது ஒளிரும் பொருளில் இருந்து வெளிப்படும் வெளிச்சத்தின் அளவை லூமென் மற்றும் லக்ஸ் என இரு அளவைகளால் அளக்கிறோம். ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒரு லூமென் அளவு ஒளி இருப்பதை ஒரு லக்ஸ் என்கிறோம். ஒரு லூமென் என்பது 1683 வாட்ஸ் அளவாகும். ஒரு 25 வாட்ஸ் குண்டு பல்பு 1500 லூமென் ஒளியை உமிழும்.
அரவிந்த்: சார்! இப்போ புதிதாக வந்துள்ள விளக்குகள் குறைவான மின் செலவில் அதிக வெளிச்சத்தை அளிக்கிறதே.....! அது எப்படி?
ஆசிரியர்: மாணவர்களே! ஒரு 100 வாட்ஸ் குண்டு பல்பு 1600 லூமென் ஒளி தரும். அதே ஒளியை ஒரு குழல் விளக்கு 30 வாட் மின்செலவிலும், எல் ஈ டி விளக்கு 20 வாட் செலவிலும் தரும். ஆகவே மின் சிக்கனத்துக்கு நாம் எல் ஈ டி வாங்க ஆரம்பித்துள்ளோம்.
பரிதா: சார்! எல் ஈ டி விளக்குகளின் அமைப்பு என்ன...? அவை எப்படி குறைந்த மின் செலவில் அதிக ஒளி தருகின்றன?
ஆசிரியர்: எல் ஈ டி விளக்குகளில் ஒளிரும் டையோடுகள் சிப் மூலம் ஒளிரச் செய்யப் படுகின்றன. எலெக்ட்ரானிக் சுற்று போர்டுகளில் மின்சாரம் நேர் மின்சாரமாக குறைந்த வோல்ட் அளவில் செலுத்தப் படுவதால் குறைவான மின் சக்தியை அவை உண்கின்றன. அதனால் அவைகளின் ஆயுள் 25000 எரியும் மணிக் காலமாக உள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 5 மணி நேரம் எரிந்தால் 5000 நாட்கள் அதாவது 13 வருடம் வரை அவை உழைக்கும்!
அரவிந்த்: சார்! இந்த மின் சிக்கனத்தை எப்படி குறிப்பார்கள்?
ஆசிரியர்: நட்சத்திர எண்ணிக்கை மூலம் மின் சிக்கனம் மக்களுக்கு எளிதில் புரியும் படி குறிக்கப்படுகிறது..., சரி நான் ஒரு கேள்வி கேட்கிறேன்...,தெரிந்த வரை சொல்லுங்கள். இருள் என்றால் என்ன?
ராஜகணபதி: வெளிச்சம் இல்லாவிட்டால் இருட்டு!
அர்ஜுன்: "பார்ட்டுல் இருண்ட வானம்' (ஆஞதபகஉ ஈஅதஓ நஓவ) அளவின் படி நட்சத்திரங்களையும் கிரகங்களையும் நம்மால் பார்க்க முடிந்தால் அது இருள் எனப் படும் சார்!
அரவிந்த்: (எழுந்து) திடீரென ஒரு இருட்டறைக்குள் நுழைந்தால் முதுகெலும்புள்ள நம்மை ஒத்த பிராணிகள் கண் அமைப்பில் உள்ள கூம்புகளும் தண்டுகளும் அதிக ரோடோஸ்பின் எனப்படும் ப்ரோட்டீன் என்ûஸமை உற்பத்தி செய்து விழிகளின் பாப்பா விரிந்து காட்சிகளை பார்க்க முயலும்!
ஆசிரியர்: நல்ல பொது அறிவு!...., (கை அமர்த்தி) விஞ்ஞான பூர்வமாகச் சொல்வதென்றால் 24 பிட் கம்ப்யூட்டர் மானிட்டர் திரையில் சிவப்பு, நீலம், பச்சை மூன்று அடிப்படை வண்ணங்களும் 255 பிக்சல் அளவுகளில் சமமாக இருந்தால் திரை வெண்மையாக இருக்கும். அதுவே மூன்றும் பூஜ்யமாக இருந்தால் திரை கருப்பாக இருண்டிருக்கும். இதுவே இருட்டு அல்லது இருள் அல்லது கருப்பு வண்ணத்தின் அடிப்படை. சரி மாணவர்களே! பிக்சல் என்றால் என்ன என்று நாளை தெரிந்து வாருங்கள்.. விவாதிப்போம்..
(வகுப்பு முடிகிறது)
காட்சி 2
இடம்: அர்ஜுன் வீடு
மாந்தர்: அர்ஜுன், அவன் அப்பா ரகுவரன்,(போட்டோ கிராபர்) அம்மா ரோகிணி
(இரவு எட்டு மணி. டைனிங் டேபிளில் அனைவரும் உணவருந்துகிறார்கள்)
அர்ஜுன்: அப்பா நீங்க கேமரா வச்சிருக்கீங்களே.. பிக்சல் என்றால் என்ன..கேமராவின் தரம்,படத் தெளிவு, துல்லியம் இத்தனை அதிக பிக்சல்கள் எனச் சொல்லி அறியப்படுகிறதே.. அதைப் பத்திச் சொல்லுங்க.. நாளை ஆசிரியர் கேட்பார்
ரகுவரன்: பலே!...., சொல்றேன். படங்கள் ஒளிப்புள்ளிகளாகத்தான் பதிவாகின்றன. ஒரு படம் எடுக்கும் எலெக்ட்ரானிக் கருவியின் திறன் பிக்சல்களில் சொல்லப்படும். ஒரு பிக்சல் என்பது ஒரு சதுர செண்டி மீட்டரில் பதிவாகும் ஒளிப் புள்ளிகளைக் குறிக்கும். படமானது மூன்று வண்ண புள்ளிகளாகப் பதிவாகிறது. ஒரு பிக்சல் என்பது 3 வண்ணப் புள்ளிகள் அடங்கியது. ஒரு படத்தை 9 லட்சம் புள்ளிகளாக பதிவு செய்தால் ஒவ்வொரு வண்ணமும் 3 லட்சம் புள்ளிகளாக இருக்கும். சிவப்பு, பச்சை, நீலம் என. அப்போது அந்தக் கருவி 500 ஷ் 600 பிக்சல் எனப்படும்.
அம்மா ரோகிணி: ஏங்க! எனக்கும் புரியும் படி சொல்லுங்க..., பிக்சல்ன்னா...
என்ன?
அப்பா ரகுவரன்: பிக்சல் என்றால் ஒரு பிம்பத்தின் குறு வடிவம்...., பல பிக்சல்கள் கோர்வையாக ஒரு வடிவத்தை பிம்பமாகக் காட்டுகின்றன..
அர்ஜுன்: அப்பா! மெகா பிக்சல் என்பது என்ன?
அப்பா: பத்து லட்சம் பிக்சல்கள் ஒரு மெகா பிக்சல் எனப்படும்.. தற்போது கெனான் நிறுவனத் தயாரிப்பில் 120 மெகா பிக்சல் கேமராக்கள் வந்து விட்டன. பிக்சல் அதிகமாக அதிகமாக படம் துல்லியமாக இருக்கும். மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் ஆயிரம் கோடி பிக்சல் அதாவது ஒரு டெரா பிக்சல் துல்லியத்தில் படம் உருவாக்கும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது!
அம்மா ரோகிணி: அது எதுக்குப் பயன் படுங்க?
அப்பா: விண் வெளியில் அண்டங்களைப் படம் எடுக்க, விண்ணில் இருந்து துணைக் கோள்கள் மூலம் புவியை புகைப் படம் எடுத்து துல்லியமாக ஆராய அவை உதவும். செவ்வாய் கிரகத்தில் ஊர்ந்து செல்லும் ரோவர் மிகத் துல்லியமாகப் படம் எடுக்கும் கேமராவை சுமந்து அலைகிறது.. பூமிக்குப் படமெடுத்து அனுப்புகிறது!
அர்ஜுன்: சூப்பர்ப்பா!
காட்சி 3
இடம்: மாணவி பரிதா இல்லம்
மாந்தர்: பரிதா, அப்பா கண் டாக்டர் சல்மான், அம்மா ஆயிஷா
பரிதா: அப்பா! ஆசிரியர் இன்னிக்கு ஒளியின் அலகான லூமென் பற்றிச் சொன்னார்.. என்னிடம், "உன் அப்பா கண் டாக்டர் அல்லவா அவரிடம் கண் எப்படி காட்சிகளைக் காண்கிறது எனத் தெரிந்து வா' என்று சொன்னார்...., நாளை வகுப்பில் பகிர்ந்து கொள்ள...
டாக்டர் சல்மான்: ஓ! நல்ல விஷயம்! கண் ஒரு கேமராதான்! விழி லென்ஸ் மூலம் பிம்பத்தை உள் வாங்கி விழித்திரையில் பிம்பத்தை அறிபவை தண்டுகள் மற்றும் கூம்புகள். அவை மூளைக்கு நரம்பு மண்டலம் மூலம் பிம்பத்தை அனுப்ப, நாம் பார்ப்பதாக உணர்கிறோம். அவ்வளவே!
பரிதா: அப்பா நம் கண்ணின் துல்லியம் மெகா பிக்சலில் எத்தனை?
அப்பா: அது நாம் பார்க்கும் கோணத்தை பொறுத்து மாறும்.. உச்சியில் வான், விட்டம், கூரையை 90 டிகிரியில் செங்குத்தாக பார்க்கும் போது 324 மெகா பிக்சல், பக்க வாட்டில் 120 டிகிரியில் சாய்வாக தரையில் இருந்து சற்றே உயர பார்க்கும் கோணத்தில் 576 மெகா பிக்சல் ஆகும். பார்க்கும் பிம்பம் தெளிவாக இருக்க பார்வையை சற்றே குனிந்து பால்கனியில் இருந்து சினிமா பார்ப்பது போல பார்த்தால் துல்லியம் அதிகம்.
அம்மா: ஓ!
அப்பா சல்மான்: மனிதக் கண்களால், ஒரு கோடி விதமான வண்ணங்களை பகுத்து வித்தியாசம் காண இயலும். கண் நம் உடலில் மெலாடானின் ஹார்மோன் உற்பத்தியை பராமரித்து வருகிறது.. நம் உடலில் ஒரு தானியங்கி கடிகாரம் உள்ளது...! அதைப் பராமரிப்பதும் கண் தான்.
அம்மா: என்னது?...,கடிகாரமா?
அப்பா: ஆமாம்.. அது பல இயக்கங்களுக்கு நேரத்தைக் குறித்து வைத்து, அதன் படி உறுப்புகளை இயங்க வைக்கும்.. நிறுத்தியும் வைக்கும்.
பரிதா: கண் அளவு என்ன?
அப்பா: ஒரு நடுத்தர வயதுள்ள மனிதனின் கண் உருண்டையின் உள் விட்டம் 24 மில்லி மீட்டர். ஒருவர் கண்ணைப் பார்த்தே பல விஷயங்களைச் சொல்லிடலாம்.. அவர் தூங்கி எத்தனை நாளாகுது...,சாப்பிட்டு எத்தனை நாழி ஆகுது.....,அது மட்டுமா? கண் பளிச்சென்று தெரிய கீரை, மீன் இவைகளைச் சாப்பிடலாம்....,கருவேப்பிலை, காரட் இவற்றில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வைக்கு மிக முக்கியம்....!
பரிதா: ஒரு மனிதனால் எவ்வளவு தூரம் தெளிவாகப் பார்க்க இயலும்?
அப்பா: 26 லட்சம் ஒளியாண்டு தொலைவில் உள்ள அண்ட்ராமிடா பேரண்டத்தையும் நல்ல அமாவாசை காரிருளில் 48 கிமீ தூரத்தில் எரியும் மெழுகு வர்த்தியையும் காண இயலும்!
பரிதா: அப்பா! மணி என்னப்பா ஆவுது?
அப்பா: மூக்குக்கண்ணாடி போட்டாதானே சுவரில் மாட்டி இருக்கிற கடிகாரத்தில் என்னால் மணி பார்க்க முடியும்...., ஆயிஷா கண்ணாடியை எடுத்து வா. கொஞ்சம் பேப்பரும் படிக்க வேண்டியிருக்கு.
அம்மா: (பாடியபடி வருகிறார்) "ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா.. உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா..' பாரதி கண்ணாடி போட்டுக்காதவர் இல்லீங்களா?
(திரை)