சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்
எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கேற்றதாக மாற்றுபவன் எவனோ அவனே அறிவாளியாவான்.
- எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கேற்றதாக மாற்றுபவன் எவனோ அவனே அறிவாளியாவான்.
- நீங்கள் எண்ணித் துணிந்தபின் உங்களை உலகம் முழுதும் வானெடுத்து எதிர்த்து நின்றபோதிலும் கொண்ட கருமத்தைக் கைவிடாதீர்கள்.
- உண்மையான ஒரு விஷயம் உலகில் எவராலும் போற்றப்படாமற் போகாது.
- ஒவ்வொருவனும் எஜமானனாக இருப்பதென்பது எளிது. ஆனால் வேலைக்காரனாக இருப்பதே கஷ்டம்.
- துன்பமும், ஏழ்மையும் போதிப்பதுபோல் வேறு ஒன்றும் போதிக்க முடியாது.
- உங்களை ஓர் ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் சக்தியல்ல; நன்மையும், தெய்வ பக்தியுமே சக்தி.
- பெரிய செயல்களுக்கு அடிப்படை பெரிய கொள்கைகளே.
- உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள். பின்பு உலகமே உங்கள் வசமாகும்.
- தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் சக்தியை உண்டு பண்ணுவதே உண்மைக் கல்வி.