முகப்பு
சிறுவர்மணி

திருப்பாவை!

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்சுந்தரத் தமிழில் சொல்லெடுத்துப்

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:28 PM
பகிர்:

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்
சுந்தரத் தமிழில் சொல்லெடுத்துப்
பாடித் தொடுத்த பாமாலை
பைந்தமிழ் மணக்கும் பூமாலை!

நாடி வருவோர்க் கருள் சொரியும்
நாரணன் புகழை நமக்குரைக்கும்
வாடா தென்றும் தமிழமுதை
வாரியே வழங்கும் திருப்பாவை!

ஆண்டாள் என்னும் தமிழ்ப்பாவை
அழகாய் வடித்த திருப்பாவை
அவளோ தமிழின் மாமேதை!
அள்ளித் தந்தாள் இறையமுதை!

எழுச்சித் தமிழின் சொற்கொண்டு
எழுதி வழங்கிய கற்கண்டு!
பிழயறு மாலவன் திருவருளைப்
பேசும் நல்ல பூச்செண்டு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.