முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்!

பசியோடு இருக்கும் ஒருவன், தன் உணவை அடுத்தவனுக்குக் கொடுத்தால், அதுவே அவனை மேலும் சக்தியுள்ளவன் ஆக்குகிறது.  

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

பசியோடு இருக்கும் ஒருவன், தன் உணவை அடுத்தவனுக்குக் கொடுத்தால், அதுவே அவனை மேலும் சக்தியுள்ளவன் ஆக்குகிறது.  
- புத்தர்

இன்றே உங்களால் செய்ய முடிந்ததை ஒருபோதும் நாளை வரை தள்ளிப் போடாதீர்கள்.  
-  பெஞ்சமின் ஃபிராங்ளின்

ஈடுபாடு, பங்கேற்பு, பொறுப்புணர்வு  இந்த மூன்று அம்சங்களே செயல் திட்டத்தின் தாரக மந்திரங்கள்.  
- அப்துல் கலாம் 

மனத்தை ஒருவன் வைத்திருக்கும் நிலையைப் பொறுத்தே அவன் அடையும் மகிழ்ச்சி இருக்கிறது.   
-  ஆபிரஹாம் லிங்கன் 

வாழ்க்கையை எண்ணத்தாலும், செயலாலும் அளக்க வேண்டும்....காலத்தால் அல்ல!  
-  சர் ஜான் லபாக்

இலட்சியம் பெரிதாக இருக்கும் என்றால் நமது வெற்றியும் பெரிதாக இருக்கும்! 
-  பிரைட் 

எதிர்மறையான நிகழ்வுகளை நேர்மறையாக எடுத்துக் கொள்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்!  
-  கலீல் ஜிப்ரான் 

ஏமாற்றங்களைத் தீயிலிட்டுப் பொசுக்குங்கள்,....மனதிற்குள் வைத்துப் பூட்டாதீர்கள்.  
- விவேகானந்தர்

உடல் ஆரோக்கியத்திற்கும் மன மகிழ்ச்சிக்கும் உதவக்கூடிய ஒன்றே ஒன்று ..."உழைப்பு!!'  
-  ராக்பெல்லர்

ஒரு செயலைச் சிறப்பாகச் செய்து முடிப்பதுதான் அந்தச் செயலுக்குக் கிடைக்கக் கூடிய விருது!  
-  எமர்சன் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.