கேப்டன் வி.சுந்தரம்
அது 1959-ஆம் ஆண்டின் ஒரு மழை நாள். சென்னையில் அன்று பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. தனது காரை ஓட்டிக் கொண்டிருந்தார் சுந்தரம்.
சிறுவர்மணிகேப்டன் வி.சுந்தரம்
அது 1959-ஆம் ஆண்டின் ஒரு மழை நாள். சென்னையில் அன்று பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. தனது காரை ஓட்டிக் கொண்டிருந்தார் சுந்தரம்.
அது 1959-ஆம் ஆண்டின் ஒரு மழை நாள். சென்னையில் அன்று பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. தனது காரை ஓட்டிக் கொண்டிருந்தார் சுந்தரம். அவர் வீட்டுச் சுவர் அருகே நாய்க்குட்டிகள் இரண்டு ஒதுங்க இடமின்றி மழையில் நனைந்து நடுங்கியபடி இருந்தன. மனம் வருந்திய அவர் தன் வீட்டுக் கார்ஷெட்டில் அவற்றைத் தூக்கி வந்து முதலுதவி அளித்தார்.
பல நாள்களாக அவை உணவின்றி இருந்திருக்க வேண்டும். இதனால் உடல் மெலிந்து எலும்புக் கூடு போல் காட்சி அளித்தன. உடல் வலுவில்லாததால் அவற்றால் நகரக் கூட முடியவில்லை. உணவு உண்ட பிறகு அவற்றின் கண்களில் தெரிந்த ஒளி சுந்தரத்தின் மனதை நெகிழச் செய்தது. இப்படித் துன்புறும் விலங்குகளுக்குப் புகலிடம் அளித்தால் என்னவென்று சிந்தித்தார். அதன் விளைவாகத் தோன்றியது "நீல சிலுவைச் சங்கம்' எனப்படும் ஆப்ன்ங் இழ்ர்ள்ள் ர்ச் ஐய்க்ண்ஹ.
தெருவில் திரியும் நாய்கள் பெரும்பாலும் உணவின்றிக் கிடைத்ததை உண்டு வாழ்ந்தன. பெரும்பாலானவை இருப்பிடம் ஏதுமின்றி வாகனங்களில் அடிபட்டு இறந்தன. மேலும் சில வெறிநோய்க்கு ஆளாகி மனிதர்களையும், பிற விலங்குகளையும் கடித்து இறந்தன. இதனால் வெறிநோய் (ழ்ஹக்ஷக்ஷண்ங்ள்) பரவும் அபாயமும் இருந்தது. இவ்வாறு தெருவில் திரியும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துக் கொன்றனர். உலகின் எல்லா நாடுகளிலும் இப்பிரச்னை இருந்தது. ஆசியாவிலேயே முதன்முதலாக விலங்குகளைக் காக்க உருவான முதல் நிறுவனம் "நீல சிலுவைச் சங்கம்' ஆகும். அதுவும் தனிமனிதர் ஒருவரால் உருவாக்கப்பட்டது இதுவே ஆகும்.
தனது காரை ஓர் ஆம்புலன்ஸாக மாற்றிக் கொண்டார் சுந்தரம். நோயுற்ற விலங்குகள், காயம்பட்டவை போன்றவற்றிற்கு உடனுக்குடன் முதலுதவி அளித்தார். எண்ணிக்கையில் பெருகி வரும் தெரு நாய்களைக் கொல்வது ஒன்றே அந்நாளில் நடைமுறையாக இருந்தது. இதைத் தடுக்க விரும்பிய அவர் தெரு நாய்களுக்கு இனப் பெருக்கத் தடை அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற யோசனையை அரசுக்கு முன் வைத்தார். ஆனால் அந்நாளைய தமிழக அரசு ஏனோ இந்த யோசனையை ஏற்க மறுத்தது. எனவே தன்னார்வத் தொண்டுள்ளம் கொண்ட இரு கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் தன் சொந்தச் செலவில் சென்னை தியாகராய நகரில் அலைந்து கொண்டிருந்த நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்தார். இதன் காரணமாக நாய்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. மேலும் முறையாகத் தடுப்பூசி போடப்பட்டதால் அவற்றிற்கு வெறிநோயும் ஏற்படவில்லை. சென்னையின் பல பகுதிகளுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தினார். தெரு நாய்களின் தொல்லை சிறிது சிறிதாகக் குறைந்தது.
தென் சென்னைப் பகுதியில் இப்பிரச்னை முழுவதும் கட்டுப்பட்டது. 1995-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த எஸ். அப்துல் ஹசன் சென்னையின் பிற பகுதிகளிலும் இப்பிரச்னையைக் கட்டுப்படுத்த விரும்பி இவரை அணுகினார்.
இதன்படி சென்னை மாநகரம் முழுவதும் இவரது சேவை விரிவாக்கப்பட்டது. இதனால் 1996-ஆம் ஆண்டு 120-ஆக இருந்த வெறி நோய் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 2007-ஆம் ஆண்டு 0-ஆக மாறியது. உலக நாடுகள் பல நீல சிலுவைச் சங்கத்தின் சேவையைப் பாராட்டின. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தாராளமாக நிதி உதவி அளித்தனர். விலங்குகளின் பாதுகாப்பு, உணவு மற்றும் இருப்பிட வசதி, மருத்துவ வசதி, அவசர ஊர்தி வசதி போன்றவை இலவசமாக அளிக்கப்படுகின்றன.
திடீரென்று வெளிநாடு செல்ல வேண்டி உள்ளவர்கள் தங்கள் வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளை "ப்ளூ கிராஸ்' நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டுச் செல்லலாம். பள்ளி ஆய்வகங்களில் தவளைகள் கொல்லப்படுவதைத் தடுக்க "இர்ம்ல்ன்ச்ழ்ர்ஞ்' என்ற செயலியைக் (ஹல்ல்) கணினியில் அறிமுகம் செய்தது ப்ளூ கிராஸ் நிறுவனம். இச் செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் தவளைகளைக் கொல்லாமல் அதன் உடற்கூறுகளை மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும். மனிதர்களுக்கு அளிப்பதற்கு முன் மருந்துகளை விலங்குகள் மேல் செலுத்தி பரிசோதிப்பதை நீல சிலுவைச் சங்கம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாகப் பல அரிய வகை முயல்கள் மற்றும் குரங்குகள் போன்றவை காப்பாற்றப்பட்டுள்ளன. விலங்குகள் மட்டுமல்லாது பறவைகளுக்கும் இந்நிறுவனம் பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து வருகிறது.
அறிந்து கொள்வோம்:
1. 1916-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் நாள் பிறந்த சுந்தரம் ஒரு மிகச் சிறந்த விமான ஓட்டி (டண்ப்ர்ற்) ஆவார். இங்கிலாந்து சென்று விமானம் ஓட்டும் பயிற்சி பெற்ற அவர் சென்னை விமானக் கழகத்தில் (இட்ங்ய்ய்ஹண் ச்ப்ஹ்ண்ய்ஞ் ஸ்ரீப்ன்க்ஷ) பயிற்றுநராகப் பணிபுரிந்தார். 1935-ஆம் ஆண்டு தனது 19-ஆவது வயதில் அவர் தொழில் முறை பைலட்டாகப் பதிவு செய்து கொண்டார். இதனால் இவர் "கேப்டன்' என்று அழைக்கப்பட்டார்.
2. இந்தியாவின் எல்லா விமான நிலையங்களிலும் தனது விமானத்தைத் தரை இறக்கியுள்ளார். இது மிகப் பெரிய சாதனையாகும். ஏனெனில் இதற்கு முன் ஒருவரும் இந்தியாவின் நீள அகலத்தை இப்படி ஆகாய மார்க்கமாகப் பயணித்ததில்லை.
3. தாஜ்மஹாலை முதன் முதலாக ஆகாயத்தில் இருந்து புகைப்படம் எடுத்தவரும் இவரே ஆவார். தனது பிரிட்டிஷ் நண்பர் ஒருவருக்காக இவர் எடுத்த புகைப்படம் இன்று முக்கிய ஆவணமாக விளங்குகிறது.
4. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் பல அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் விமானிகளுக்கு இவர் பயிற்சி அளித்துள்ளார்.
5. 1945-ஆம் ஆண்டு முதல் 1951-ஆம் ஆண்டு வரை இவர் மைசூர் மஹாராஜாவின் விமான ஓட்டியாகப் பணிபுரிந்துள்ளார்.
6. இந்தியாவின் பல சமஸ்தானங்களை இணைக்கும் நேரத்தில் பண்டித ஜவஹர்லால் நேருவும், சர்தார் வல்லபபாய் படேலும் இந்தியா முழுவதையும் ஆகாய மார்க்கமாகப் பயணிக்க விரும்பினர். பண்டித நேரு சுந்தரத்தையே அதற்கு விமானம் ஓட்டும்படி அழைத்தார். இதனால் இந்தியா முழுவதையும் மீண்டும் ஒருமுறை பயணிக்கும் வாய்ப்பை இரண்டாவது முறை பெற்ற பெருமை அடைந்தார்.
7. டண்ள்ற்ர்ய் ங்ய்ஞ்ண்ய்ங்க் ஹண்ழ்ஸ்ரீழ்ஹச்ற் என்னும் ஒரு வகை விமானத்தில் பயணித்து ஈங் ஏஹஸ்ண்ப்ப்ஹய்க் ஈர்ஸ்ங் என்ற இடத்தில் இருந்து இலண்டனுக்கும், இலண்டனில் இருந்து சென்னைக்கும் 27 மணி நேரத்தில் வந்தடைந்தார். இது இன்றளவும் முறியடிக்கப்படாத சாதனையாகும்.
8. ஏறத்தாழ 35 ஆண்டுகள் விமான ஓட்டியாகப் பணிபுரிந்த சுந்தரம் "தலைசிறந்த விமான ஓட்டி' என போற்றப்படுகிறார். விமான என்ஜின்களில் கோளாறுகள் ஏற்பட்ட பொழுதும் எத்தகைய விபத்துமின்றி பல முறை தரை இறக்கிய பெருமை இவரையே சாரும்.
9. விலங்குகள் மேல் கொண்ட அன்பால் பிராணிகள் நல வாரியத்தின் (அய்ண்ம்ஹப் ரங்ப்ச்ஹழ்ங் ஆர்ஹழ்க் ர்ச் ஐய்க்ண்ஹ) கௌரவ செயல் தலைவராக 1964 முதல் 1987 வரை பதவி வகித்துள்ளார்.
10. தாம் செல்லும் இடமெங்கும் விலங்குகளைக் காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சொற்பொழிவாற்றி உள்ளார். இவரது சேவைக்காக 1964-ஆம் ஆண்டு "குயின் விக்டோரியா பதக்கம்' இவருக்கு வழங்கப்பட்டது. 1987-ஆம் ஆண்டு ""Watamull foundation award' from USA இவருக்கு வழங்கப்பட்டது.
11. தனது வாழ்க்கை அனுபவங்களை "ஒரு விமானியின் கதை' (An airman's Saga) என்ற தலைப்பில் நூலாக எழுதியுள்ளார்.
12. இம்மாமனிதர் 1997-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் நாள் காலமானார். "PRANI MITHRA AWARD' என்ற விருது இவரது மறைவிற்குப் பிறகு வழங்கப்பட்டது.