முகப்பு
சிறுவர்மணி

சொல்லு பாப்பா!

சொல்லு பாப்பா! நீ சொல்லு பாப்பா! - தேசம் சுகம் பெறும் வழிகளை நீ சொல்லு பாப்பா!

Updated On : 4 ஆகஸ்ட், 2018 at 10:00 AM
பகிர்:

சொல்லு பாப்பா! நீ சொல்லு பாப்பா! - தேசம் 
சுகம் பெறும் வழிகளை நீ சொல்லு பாப்பா!

உழைப்பில்தான் முன்னேற்றம் உண்டு பாப்பா! - வீணில் 
ஊர் சுற்றும் போக்கிரிகள் மண்டு பாப்பா!
பிழைப்பதிலேன் குறுக்கு வழி? தீது பாப்பா! - நம்ம
பெரிவங்க சொன்னதெல்லாம் வேதம் பாப்பா!         ----(சொல்லு பாப்பா....)

பள்ளிக்கூடம் நம்மறிவை கூர்மையாக்கும்! - தேடும் 
பட்டறிவே நம் வாழ்வைச் சீர்மையாக்கும்!
வெள்ளி, தங்கம் உடலுக்கு அழகு கூட்டும் - மதி
விளக்கேற்று!... அகமெல்லாம் ஒளிரும் பாப்பா!      ----(சொல்லு பாப்பா...)

Advertisement

அடுத்தவர் பொருளெதற்கு? ஆசை வேண்டாம் - முயற்சி 
செய்ததிலே கிடைத்தது போதும் பாப்பா!
முடிந்தவரை பிறர்க்குதவி பண்ண வேண்டும்! 
முதியவர்கள் ஆசிகளைப் பெற்றிட வேண்டும்!                   -----(சொல்லு பாப்பா)

காற்று, ஒலி, நீர் நிலங்கள் இயற்கையன்னை - தந்த 
அருட்கொடை!...கறைபடுத்தும் முயற்சி தீங்காம்! -
ஓடியாடி விளையாடி உடலைக் காப்பாய் -அன்புடன் 
ஒற்றுமையாய் வாழ்ந்து உலகை வெல்லு பாப்பா!       ----(சொல்லு பாப்பா)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.