5 மாநில பேரவைத் தேர்தல்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - முழு விவரம்!
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநில பேரவைத் தேர்தல்களின் கருத்துக் கணிப்பு முடிவுகள்...
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி!
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப். 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. இதனையொட்டி, கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று மாலை வெளியானது.
இதில், தமிழ்நாட்டில் அக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புகள் தவெக ஆட்சி என்றும், சிஎன்என், ஜேவிசி கருத்துக் கணிப்புகள் அதிமுக தலைமையிலான ஆட்சி என்று சொன்னாலும், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதாகக் கூறியிருக்கிறது.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி!
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், இது கிட்டத்தட்ட 18 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Advertisement
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி!
மேற்கு வங்கத்தில் சில கருத்துக் கணிப்புகள் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியே என்று சொன்னாலும் வேறு சில கருத்துக் கணிப்புகள் பாஜக ஆட்சியைக் கைப்பற்றுவதாகக் கூறுகிறது.
கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி!
கேரளத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கூட்டணி 2 ஆம் இடத்துக்குத் தள்ளப்படும் என கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாமில் பாஜக ஆட்சி!
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியமைக்கும். இங்கு கிட்டத்தட்ட 88 - 100 தொகுதிகளை வெல்லு என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் என இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி!
இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு
திமுக : 92 - 110
அதிமுக : 22 - 32
தவெக : 98 - 120
மற்றவை: 0
புதுச்சேரி பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்புகள்
பீபள்ஸ் பல்ஸ் கருத்துக் கணிப்பு
என்.ஆர். காங்கிரஸ்: 16 - 19
காங்கிரஸ் கூட்டணி: 10 - 12
மற்றவை: 1- 2
ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு
என்.ஆர். காங்கிரஸ்: 16 - 19
காங்கிரஸ் கூட்டணி: 10 - 12
ஜேவிசி கருத்துக் கணிப்பு
என்.ஆர். காங்கிரஸ் : 15 - 17
காங்கிரஸ் கூட்டணி : 11 - 13
தவெக: 1 - 2
மற்ற கட்சிகள்: 1
கேரள பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்புகள்
ஜேவிசி - டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு
இடதுசாரி கூட்டணி (எல்டிஎஃப்) : 52 - 61
காங்கிரஸ் (யுடிஎஃப்) : 72 - 84
பாஜக (என்டிஏ) : 03 - 07
பிற : 0
வோட் லைஃப் கருத்துக் கணிப்பு
இடதுசாரி கூட்டணி (எல்டிஎஃப்) : 58-68
காங்கிரஸ் (யுடிஎஃப்) : 70-80
பாஜக (என்டிஏ) : 0-3
இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு
இடதுசாரி கூட்டணி (எல்டிஎஃப்) : 78-90
காங்கிரஸ் (யுடிஎஃப்) : 49-62
பாஜக (என்டிஏ) : 0-3
மற்றவை : 0
மேட்ரிஸ் கருத்துக் கணிப்பு
இடதுசாரி கூட்டணி (எல்டிஎஃப்) : 70-75
காங்கிரஸ் (யுடிஎஃப்) : 60-65
பாஜக (என்டிஏ) : 3-5
மற்றவை - 0
பீப்பள்ஸ் பல்ஸ் கருத்துக் கணிப்பு
இடதுசாரி கூட்டணி (எல்டிஎஃப்) - 75-85
காங்கிரஸ் (யுடிஎஃப்) - 55-65
பாஜக (என்டிஏ) : 0-3
மற்றவை : 0
பி மார்க் கருத்துக் கணிப்பு
இடதுசாரி கூட்டணி (எல்டிஎஃப்) : 62-69
காங்கிரஸ் (யுடிஎஃப்) :71-79
பாஜக (என்டிஏ) : 1-4
மற்றவை : 0
திமுக ஆட்சி அமைக்கிறது
தேர்தல் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் தெரியவந்துள்ளது.
ஆளும் கட்சியே வெல்லும் என என்டி டிவி - பீபள்ஸ் பல்ஸ், மேட்ரிஸ், ரிபப்ளிக் - பி மார்க் கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி அமைக்கும்
ஜேவிசி மற்றும் சிஎன்என் - நியூஸ் 18 கருத்துக் கணிப்பு முடிவில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேவிசி கருத்துக் கணிப்பு
திமுக : 75 - 95
அதிமுக : 128 - 147
தவெக : 8 - 15
மற்றவை: 0
சிஎன்என் - நியூஸ் 18 கருத்துக் கணிப்பு
திமுக : 103 - 113
அதிமுக : 114 -124
தவெக : 4 - 10
மற்றவை: 0
தமிழ்நாடு கருத்துக் கணிப்புகள்
என்டி டிவி - பீபள்ஸ் பல்ஸ் கருத்துக் கணிப்பு
திமுக : 125 - 145
அதிமுக : 65 - 80
தவெக : 18- 24
மற்றவை: 2 - 6
மேட்ரிஸ் கருத்துக் கணிப்பு
திமுக : 122 - 132
அதிமுக : 87 - 110
தவெக : 10 - 12
மற்றவை: 0- 6
ரிபப்ளிக் - பி மார்க் கருத்துக் கணிப்பு
திமுக : 125 - 145
அதிமுக : 65 - 85
தவெக : 16 - 26
மற்றவை: 1 - 6
ஜேவிசி கருத்துக் கணிப்பு
திமுக : 75 - 95
அதிமுக : 128 - 147
தவெக : 8 - 15
மற்றவை: 0
சிஎன்என் - நியூஸ் 18 கருத்துக் கணிப்பு
திமுக : 103 - 113
அதிமுக : 114 -124
தவெக : 4 - 10
மற்றவை: 0
இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு
திமுக : 92 - 110
அதிமுக : 22 - 32
தவெக : 98 - 120
மற்றவை: 0
மேற்கு வங்க பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்பு
பி - மார்க் கருத்துக் கணிப்பு
திரிணமூல் - 118-138
பாஜக - 150-175
காங்கிரஸ் - 02-06
மேட்ரிஸ் கருத்துக் கணிப்பு
திரிணமூல் - 125-140
பாஜக - 146-161
காங்கிரஸ் - 6-10
போல் டைரி கருத்துக் கணிப்பு
பாஜக - 142-171
திரிணமூல் காங்கிரஸ் - 99-127
மற்ற கட்சிகள் - 1
ஜேவிசி கருத்துக் கணிப்பு
பாஜக - 49 - 57
திரிணமூல் காங்கிரஸ் - 84 - 92
மற்ற கட்சிகள் - 1
சிஎன்என் - நியூஸ் 18 கருத்துக் கணிப்பு
பாஜக - 147
திரிணமூல் காங்கிரஸ் - 141
மற்ற கட்சிகள் - 2
மேற்கு வங்கம்ஏபிபி கருத்துக் கணிப்பு
பாஜக - 146 - 161
திரிணமூல் காங்கிரஸ் 125 - 140
மற்ற கட்சிகள் - 0
அஸ்ஸாம் பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்பு
ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு
என்டிஏ: 88 - 100
காங்கிரஸ்: 24 - 36
பிற: 0 -3
ஜேவிசி கருத்துக் கணிப்பு
என்டிஏ: 88 - 101
காங்கிரஸ்: 23 - 33
பிற: 2 - 5
இந்தியா டுடே கருத்துக் கணிப்பு
என்டிஏ: 85 - 95
காங்கிரஸ்: 25 - 32
பிற: 6 - 12
ரிபப்ளிக் கருத்துக் கணிப்பு
என்டிஏ: 92
காங்கிரஸ்: 30
பிற: 4
பி - மார்க் கருத்துக் கணிப்பு
என்டிஏ: 82 -94
காங்கிரஸ்: 30 - 40
பிற: 1 - 5
சிஎன்என் - நியூஸ் 18 கருத்துக் கணிப்பு
என்டிஏ: 90 -100
காங்கிரஸ்: 23 -33
பிற: 0
மே. வங்கத்தில் 2 ஆம் கட்டமாக 89.99% வாக்குப் பதிவு
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டமாக காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 89.99 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
சற்று நேரத்தில் கருத்துக் கணிப்பு முடிவுகள்!
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநில பேரவைத் தேர்தல்களின் கருத்துக் கணிப்பு முடிவுகள் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளது.