முகப்பு
சிறுவர்மணி

அம்மா தந்த ஊக்கம்!

அருணன் மதுரைக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான். அவனுக்கு அங்கு பிரபலக் கம்பெணி ஒன்றில் இண்டர்வியூ.

சிறுவர்மணி

அம்மா தந்த ஊக்கம்!

அருணன் மதுரைக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான். அவனுக்கு அங்கு பிரபலக் கம்பெணி ஒன்றில் இண்டர்வியூ.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:


அருணன் மதுரைக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான். அவனுக்கு அங்கு பிரபலக் கம்பெணி ஒன்றில் இண்டர்வியூ. இது எத்தனையாவது இண்டர்வியூ என்று சொல்ல முடியவில்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இண்டர்வியூ, எழுத்துத் தேர்வு என்று கலந்து கொள்வதால், எண்ணிக்கை மறந்து போயிற்று. வேலைக்கு விண்ணப்பம் போட்டு அடிக்கடி, இது போன்று இண்டாவியூக்களில் கலந்து பாதகமான பதில்களையே எதிர் கொள்வதால் அருணனுக்கு இண்டர்வியூ மீது ஒருவிதமான சலிப்பு உருவாகி விட்டது. 
""நடந்து போனத நினச்சு கவலப்படாதே! அடுத்த அடி எப்பிடி எடுத்து வைக்கணும்னு யோசி. இன்னக்கி இல்லாட்டாலும் நாளைக்கி!  நாளைக்கி! கிடைக்காவிட்டாலும் இன்னோர் நாளக்கி நிச்சயம் நல்ல தகவல் வராமல் போகாது!''என்று நம்பிக்கை ஊட்டினாள் அம்மா!
அம்மாவின் நம்பிக்கையூட்டும் "டானிக்' வார்த்தைகள் அருணனை மீண்டும், மீண்டும் நேர்காணல்களில் கலந்து கொண்வதற்கான தெம்பைத் தந்தன. 
இன்றும் அப்படித்தான்!... அருணனுக்கு சாதமான சங்கதிகளைக் கூறி இண்டர்வியூக்கு அனுப்ப ஆயத்தப் படுத்தினாள் காமாட்சி. சகுனம் பார்த்து, சம்பிரதாயங்கள் சில கடைப்பிடித்து, நெற்றியில் விபூதி பூசி ஆசிர்வாதம் செய்து, செலவுக்கும் பணம் தந்து மகனை வழியனுப்பினாள்.  அம்மாவிடம் பணம் வாங்கும் போது அருணனின் வலக்கை சற்று நடுங்கியது. 
அம்மாவின் உழைப்புத்தான் அன்றாட வாழ்க்கை வண்டியை ஓட்ட வழி வகை செய்கின்றது. ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த அப்பா விபத்தொன்றில் இறந்து போனார். கணவனை இழந்த காமாட்சி மூன்று மாதங்களுக்கு மேல் முடங்கிக் கிடக்கவில்லை. ஊர் வாய்களைப் பற்றிக் கவலைப் படாமல் சித்தாள் வேலைக்குச் சென்றாள்.  பி. காம். கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்த மகனை தொடர்ந்து படிக்க வைத்தாள். இண்டாவியூக்களுக்கு அலைந்து திரியும் இன்றைய நிலமையில், வேலை கிடைக்கவில்லையே...என்கிற விரக்தி ஏற்படாமல் ஆறுதல் மொழி வழங்கி அரவணைத்தாள்.  இருந்த போதிலும் ஒவ்வொரு இண்டாவியூக்கும் அம்மா உழைத்துப் பெறும் ஊதியம் வீணாகிறதோ என்கிற நினைப்பு மனதில் அலையாய் மோதும். அதனால் அம்மாவிடம் செலவுக்குப் வணம் வாங்குகிற வேளையில் அவனையும் மீறி கைகள் நடுங்கவே செய்யும். 
இண்டாவியூவில் கேட்கப்பட்ட கேள்விகள் சுலபமாகவே இருந்தன. பணிவுடன் தெரிந்த பதிலைச் சொன்னான். இது போன்று பல நேர்காணல்களில் கேட்கப்பட்ட வினாக்களுக்க சரியான விடைகளைச் சொல்லி இருக்கிறான். ஆனால் வேலைக்கான உத்தரவுதான் வரவில்லை. 
"இந்த பிரபல நிறுவனத்தில்; தகுதிக்கு மட்டுமே முன்னுரிமை தருவார்கள்… எவ்வளவு பெரிய சிபாரிசுகளுக்கும் முக்யத்துவம் கொடுக்க மாட்டார்கள்' -- என்கிற தினுசில் அபிப்ராயங்கள் அங்கு அவ்வப்போது அருணனின் செவிகளில் வந்து விழுந்தன. 
"இந்த வேலை கிடைத்துவிட்டால், வேகாத வெயிலில் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து போன அம்மாவுக்கு ஓய்வு கொடுக்கலாம்' என்கிற எண்ணம் இழையோட வீடு வந்து சேர்ந்தான் அருணன். 
நாட்கள் நகர்ந்தன. நம்பிக்கைகள் நாசமாகவில்லை.  இண்டர்வியூக்குப் போன மதுரை நிறுவனம் அருணனுக்கு நியமன உத்தரவு அனுப்பி இருந்தது. "அக்கவுண்டெண்ட்' ஆக போஸ்டிங் போட்டிருந்தார்கள்.  அருணனின் மனது ஆனந்தக் கூத்தாடியது.  ஓய்வில்லா உழைப்பில் இருந்து காமாட்சிக்கு உடனே விடுதலை கிடைத்தது. 
ஒரு மாத காலம் ஓடியது. அன்று சம்பள நாள்.  முதல் மாத ஊதியமாக அருணனுக்கு பதினைந்தாயிரம் ருபாய் வழங்கினார்கள். அதில் ஒரு ருபாய் கூட எடுக்காமால் அப்படியே அம்மாவின் கைகளில் தந்தான்.  பணத்தை வாங்கியவுடன் காமாட்சியின் கண்களில் மகிழ்ச்சி.  ஆம் இவ்வளவு பெரிய தொகையை அவளது கைகள்; இதுவரை பெற்றதில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →