சிறுவர்மணி

பாராட்டுப் பாமாலை! - 13: உயர்வு தானே வந்திடுமே!

கைகளும் இல்லை! கால்களும் இல்லை!கவலை இவர்க்கோ சிறிதும் இல்லை!

மனத்துக்கினியான்


கைகளும் இல்லை! கால்களும் இல்லை!
கவலை இவர்க்கோ சிறிதும் இல்லை!


இருப்பதை எண்ணி மிக மகிழ்ந்தார்!
சிறப்புடன் வாழ இவர் முனைந்தார்!


நகர்ந்திடக்கூட தடுமாறும் 
"நிக் வ்யூஜிக்' என்பது அவர் பெயராம்!


"போச்சே!' என்று புலம்பாமல்
போனதை எண்ணி கலங்காமல்...


பேச்சே நம்மை உயர்த்து மென்று 
பெரிதும் முயற்சி எடுத்திட்டார்!


நல் உரை கொண்டு நாட்டு மக்கள்
உள் மன ஊனத்தைச் சரி செய்தார்!


தன், கை, கால்கள் இழந்தவரின்
தன்னம் பிக்கை உரை கேட்டு


எழுச்சி யாவரும் பெற்றிட்டார்!!
உயர்ச்சி வாழ்வில் அடைந்திட்டார்!


குறையைப் பெரிதாய்க் கருதாமல்
குறிக்கோள் நோக்கி உழைத்திட்டால்


உயர்வு தானே வந்திடுமே!
உலகம் போற்றி வாழ்த்திடுமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவிரியில் தொடரும் ஆபத்து பயணம் காத்திருப்பில் ஒட்டனூா்- கோட்டையூா் பால அறிவிப்பு!

பேருந்தை மறித்து கிராமமக்கள் போராட்டம்

நாகை நகராட்சியை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம்

நாரைக்கிணறு பகுதியில் மக்கள் சந்திப்புக் கூட்டம்: அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்பு

முன்னாள் படை வீரா் நல அலுவலக வாகனம் டிச.30-இல் ஏலம்

SCROLL FOR NEXT