முகப்பு
சிறுவர்மணி

பாராட்டுப் பாமாலை!  - 24: உதவிய கரங்கள்!

பட்டுக்கோட்டைக் குளத்தில் விழுந்து தவித்தார் ஒரு மூதாட்டி!சின்னப்பொண்ணு என்று பெயர்

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

பட்டுக்கோட்டைக் குளத்தில் 
விழுந்து தவித்தார் ஒரு மூதாட்டி!
சின்னப்பொண்ணு என்று பெயர்
ஆன வயதோ எண்பது ஆகும்!

உண்டபின்பு கையைக் கழுவக் 
குளத்தில் இறங்கும்போது அவர் 
தவறி விழுந்தார் தண்ணீரீல்
தவித்தார் தத் தளித்தார்!

தீயணைப்புப் படையினர் தகவலை அறிந்து
உடனே விரைந்தனர்! பாட்டியைக் காக்க!
உடலில் அசைவு சிறிதும் இல்லை!
உயிரே இல்லை  என்றனர் சிலர்! -ஒரு

மருத்துவர் வந்தார் பரி சோதித்தார்!
நாடித்துடிப்பு நன்றாய்க் கேட்டது!
உடனே மருத்தவ மனைக்குச் சென்றால்!
காப்பாற்றிடலாம் கிழவியை என்றார்

ஆட்டோ எதுவும் கிடைக்க வில்லை
அழைத்துப் போக வண்டியும் இல்லை!
என்ன செய்வது என்றறியாமல்
கையைப் பிசைந்து நின்றது கூட்டம் 

அங்கே வந்தார் நான்கு இளைஞர்!
சிவசேனனோடு, விக்கி, சிவா,
அன்பு என்ற அருமை நண்பர் 

உதவிக் கரங்கள் நீட்டினர் உடனே!
ஒரு மோட்டார் சைக்கிள் பின்னால் 
அமர்ந்து கொண்டிரு கைகளால்
மூ தாட்டியைத் தாங்கிப் பிடித்தனர்

முனைப்பாய் விரைந்து சென்றனர்! - அரசு
மருத்துவ மனைதனில் சேர்த்தனர்!- மருத்துவர்
உடனே சிகிச்சை செய்தனர்! - உயிர்
பிழைத்துக் கொண்டாள்மூ தாட்டி!

வியந்தனர் அனைவரும் பாராட்டி!
அன்பு, சிவா, விக்கி மற்றும் -சிவ
சேனன் நால்வர் செயலினை 
நாம் என்றும்  நினைவு கொள்ளவே
"பா' மாலைதனைச் சூட்டுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.