சிறுவர்மணி

யாருடைய பசுமாடு?

தினமணி

மெய்யப்பனிடம் நிறைய மாடுகள் இருந்தன. அதில் ஒரு பசு மாட்டை விற்க முடிவு செய்தான். மாட்டை சந்தைக்கு ஓட்டிச் சென்றான்.
 அப்போது பொய்யப்பன் என்பவன் அந்த மாட்டை எப்படியாவது அபகரிக்க எண்ணினான். அதனால் மெய்யப்பனிடம் பேசிக்கொண்டே நடந்து சென்றான். சிறிது தூரம் நடந்து வந்த பொய்யப்பன், மெய்யப்பனிடம், "அண்ணே நீங்க ரொம்ப தூரம் நடந்து வந்துக்கிட்டு இருக்கீங்க. ரொம்ப களைப்பா இருக்கீங்க?; சிறிது நேரம் நான் மாட்டை ஓட்டிக்கிட்டு வர்றேன். நீங்க ஹாய்யா வாங்க!'' என்றான். அதை நம்பிய மெய்யப்பனும் பொய்யப்பனிடம் மாட்டைக் கொடுத்தான்.
 சந்தையை அடைந்தனர். பொய்யப்பன் தன் கைவசமிருந்த பசு மாட்டை விற்க ஏற்பாடுகள் செய்தான். மெய்யப்பன் அதிர்ந்து போய், "என் பசு மாட்டை நீ எப்படி விற்கலாம்?'' என்று ஆட்சேபித்தான்.
 பொய்யப்பன், "உன் பசுவா? என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? இது என் மாடல்லவா?'' என்றான்.
 சண்டை அதிகமாகவே கூட்டம் கூடியது. பிரச்னை பஞ்சாயத்திற்கு சென்றது. இருவரும் பசு தங்களுடையது என்று சாதித்தனர்.
 பஞ்சாயத்து முடிவு எடுக்க முடியாமல் தயங்கியது.
 மெய்யப்பன் திடீரென்று பசுவின் கண்களை தன் துண்டால் மூடினான். பஞ்சாயத்துத் தலைவரை நோக்கி, "தலைவரே! பசுவிற்கு ஒரு கண் தெரியாது! அது எந்த கண் என்று கேளுங்கள்!'' என்றான்.
 பொய்யப்பன் உடனே "இடது கண்!'' என்றான் தயங்காமல்!
 "ஐயா! பசுவிற்கு இரண்டு கண்களுமே நன்றாகத் தெரியும்!'' என்று கூறித் துணியை எடுத்தான் மெய்யப்பன்!
 பொய்யப்பன் அதிர்ந்து போனான்!
 மெய்யப்பன் சொன்னது உண்மை என்று நிரூபணமானது! பொய்யப்பனுக்கு தண்டனை வழங்கப்பட்டது!
 -நெ.இராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

SCROLL FOR NEXT