முகப்பு
சிறுவர்மணி

குளம்

குளத்தைச் சுற்றி நான்கு கரைகள்மரங்களோடு திகழ்ந்திடும்!

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:12 PM
பகிர்:

குளத்தைச் சுற்றி நான்கு கரைகள்
மரங்களோடு திகழ்ந்திடும்!
உளத்தைக் கவரும் தாமரைகள் 
தினமும் பூத்துக் கமழ்ந்திடும்!

உறங்கி விழிக்கும் கிராம மக்கள் 
குளத்தை நோக்கி வருவரே!
இறங்கி ஏறத் துறைகளுண்டு 
குளித்துக் களித்துத் திரும்புவர்!

களையைப் பறித்து பயிரைக் காக்கும் 
உழவர் குடியின் மக்கள் போல்
அலையில் நீந்தி அழுக்கை மேய்ந்து 
நீரைக் காக்கும் மீன்களே!

தனது நலத்தில் நீரின் நலத்தைக் 
காத்து வாழும் மீன்கள் போல்
உனது நலத்தில் ஊரின் நலத்தைக் 
காத்து மகிழ்க சிறுவனே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.