ஆசை வை!
பள்ளிக்கூடம் செல்வதற்கு ஆசை வை! - தம்பிபாடங்களைப் படிப்பதற்கு ஆசை வை!
பள்ளிக்கூடம் செல்வதற்கு ஆசை வை! - தம்பி
பாடங்களைப் படிப்பதற்கு ஆசை வை!
துள்ளி விளையாடுதற்கு ஆசை வை! - என்றும்
தூய்மை நலம் காப்பதற்கு ஆசை வை!
கள்ளமின்றிப் பழகுதற்கு ஆசை வை! - மிக்கக்
கனிவுடனே பேசுதற்கு ஆசை வை!
வெள்ளையுள்ளம் கொள்வதற்கு ஆசை வை!
வெற்றி பெற உழைப்பதற்கு ஆசை வை!
அன்னை தந்தையரை வணங்க ஆசை வை! - உனது
ஆசான் சொற்படி நடக்க ஆசை வை!
அன்பும் பண்பும் கொண்டொழுக ஆசை வை - மக்கள்
அனைவரையும் விரும்புதற்கே ஆசை வை!