குள்ள வாத்து!
குண்டு மேனி அசைத்தசைத்து குள்ள வாத்து நடந்தது!
குண்டு மேனி அசைத்தசைத்து
குள்ள வாத்து நடந்தது!
கண்டு ரசிப்பார் இல்லை என்னும்
கவலையின்றித் தொடர்ந்தது!
அன்னை தனக்குக் கற்றுத் தந்த
"குவாக் குவாக்' மொழியினை
உன்னதமாய் சொல்லிக்கொண்டு
ஊரின் எல்லை கடந்தது!
குளத்து நீரில் குதித்து நீந்தி
மீன்கள் கவ்விப் புசித்தது!
உளம் வருத்தும் பசியைத் தூர
ஓட்டி மகிழ்ச்சி கொண்டது!
தரையில் நடக்க, அலையில் நீந்த
தகுதி படைத்த வாத்துகள்
சிறகிருந்தும் கிளி போல் வானில்
பறக்கக் கூசுகின்றதே