நினைவுச் சுடர்!: நேசிப்பில் மகிழ்ச்சி!
நார்மன் வின்சென்ட் பீல் என்பவர் அமெரிக்காவில் அமைச்சராக இருந்தவர். அவருடைய நண்பர் ஒரு நாள் வின்சென்ட் பீலைச் சந்தித்தார்.
நார்மன் வின்சென்ட் பீல் என்பவர் அமெரிக்காவில் அமைச்சராக இருந்தவர். அவருடைய நண்பர் ஒரு நாள் வின்சென்ட் பீலைச் சந்தித்தார்.
""மிஸ்டர் பீல் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறீர்களா?'' என்று கேட்டார்.
அப்போது வின்சென் பீல் கூறினார்.... ""இதே கேள்வியைத்தான், ஒரு நாள், ஒன்பது வயதான என் மகள் எலிசபெத்திடம் கேட்டேன்!...''
Advertisement
""அதற்கு அவள் என்ன சொன்னாள்?'' எனக் கேட்டார் நண்பர்.
எலிசபெத் என்னிடம், ""ஆமாம் அப்பா!.... நான் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்....'' எனறாள்.
நான் என் மகளிடம், ""காரணம் புரிகிறதா?'' என்று கேட்டேன்.
""தெரியவில்லை!...'' என்றாள் எலிசபெத்.
""ஏதோ காரணம் இருப்பதால்தானே நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய்?...அதைச் சொல்லேன்!'' என்றேன் நான்.
அதற்கு எலிசபெத், ""என் சிநேகிதிகளை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.... என் டீச்சர்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.... கோயிலுக்குப் போகப் பிடிக்கிறது... என் தம்பி, தங்கை, அம்மா, அப்பா எல்லோரையும் பிடித்திருக்கிறது!... எனது விளையாட்டு இடங்கள், மேகங்கள், இயற்கை அழகு எல்லாம் எனக்குப் பிடித்திருக்கிறது!....'' என்றாள்.
அவளுடை மகிழ்ச்சியின் ரகசியத்தில் எல்லாம் அடங்கியிருக்கிறது! அவள் சிநேகிதிகளை நேசிக்கிறாள்!... ஆசிரியர்களை நேசிக்கிறாள்....கோயிலை, அங்குள்ள தெய்வத்தை நேசிக்கிறாள்,,,,தம்பி, தங்கைகள், உறவினர்களை நேசிக்கிறாள்.... அவர்களிடம் அன்பு செலுத்துகிறாள்...கிடைத்த சூழலை ரசிக்கிறாள்... இப்படி இவை அத்தனையையும் நேசிக்க, அன்பு செலுத்தக் கற்றுக்கொண்டுவிட்டால் ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.... இல்லையா? ''
""புரிகிறது வின்சென்ட் பீல்!....எனது உள்ளமும் இப்போது மகிழ்ச்சியில் தவழ்கிறது.... உங்களாலும், உங்கள் மகளின் சொற்களை என்னுடன் பகிர்ந்ததாலும்!....நன்றி!'' என்றார் நண்பர்!