முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

மனிதன் அவனது எண்ணங்களின் தலைவன்! அவனது குணங்களை அமைக்கும் சிற்பி! அவனது சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்! அவனது விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டி கர்த்தா! 

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:37 AM
பகிர்:

மனிதன் அவனது எண்ணங்களின் தலைவன்! அவனது குணங்களை அமைக்கும் சிற்பி! அவனது சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்! அவனது விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டி கர்த்தா! 
- டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி.

உண்மையும், வீரமும் எங்கு இருக்கிறதோ, அங்கு அடக்கமும் மிகுந்திருக்கும்! 
- வில்லியம் ஹெர்பர்ட்

உறுதியற்ற, குழப்பமான மனிதர்கள் ஒரு காரியத்திற்கும் உதவ மாட்டார்கள்! 
- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

நல்ல எண்ணத்தோடு இரு!.... அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்! 
- வள்ளலார்

இந்த நேரம் உன் கையில் இருக்கிறது! அதை ஞானத்தோடும், அறவழியில் நின்றும் பயன் படுத்திக்கொள்! 
- மார்க்கஸ் அரேலியஸ்

யாரையாவது நீங்கள் பழிக்கையில், அவர்களது கெட்ட கர்மங்களை விலைக்கு வாங்கிக் கொள்கிறோம்!..... யாராவது ஒருவரைப் பாராட்டுகையில் அவர்களின் நல்ல கர்மங்களை உங்கள் வயப்படுத்திக் கொள்கிறீர்கள்! 
- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

பேச்சைவிட மெளனமே சிறந்தது! பேசித்தான் தீர வேண்டுமென்றால், அந்தப் பேச்சு, உண்மையாய், நேர்மையாய், இனிமையாய் இருக்கட்டும்! 
- வியாசர்

நம்பிக்கை மிக உறுதியாய் இருக்கும்போது பிரார்த்தனை நீண்டதாக இருக்கத் தேவையில்லை! 
- மார்ட்டின் லூதர் கிங்

இருளை இருள்  அகற்றாது! ஒளிதான் அகற்றும்! வெறுப்பை வெறுப்பு அகற்றாது! அங்கே அன்பு அவசியம் தேவை! 
- மார்ட்டின் லூதர் கிங்

அறிவுள்ளவன் துன்ப காலம் வரும்போது முந்தியே தெரிந்துகொண்டு மனத்தை திடப்படுத்திக் கொள்வான்! ஆபத்து வரும்போது கலங்க மாட்டான்! 
- வியாசர்

முழு கட்டுரையைப் படிக்க →