பொன்மொழிகள்
நமது தேவைகள் குறையக் குறைய தெய்வம் நம்மை நெருங்குகிறது!
நமது தேவைகள் குறையக் குறைய தெய்வம் நம்மை நெருங்குகிறது!
- சாக்ரடீஸ்
பொறுமையில்லாதவனிடம் ஞானமும் இருப்பதில்லை.
- ஸா அதி
அறிவு தெளியத் துணிவு பிறக்கும்!
- ஹம்ப்ரி
அவதூறு சப்தமிடும்போது செவிகளை மூடிக்கொள்!
- டூவார்லெஸ்
செழுமை நற்பண்பின் உரைகல்
- டாஸிடஸ்
செருக்கு தேவர்களையும் அசுரர்களாக்குகிறது! அடக்கமோ மனிதர்களைத் தேவர்களாக்குகிறது!
- அகஸ்டின்
தீர்மானமுள்ள மனதிற்குக் கவலை இல்லை.
- அப்துல் ரஹீம்
அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது! நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது!
- அரிஸ்டாட்டில்
பக்திக்கும், மதிப்பிற்கும் உரிய இடம் கோயில் மட்டும் அல்ல; நாம் பணி புரியும் இடமும்தான்!
- காந்திஜி